//மிக மிக அவசரம்-தனி கவனம்//
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.013186/அ5/2021 நாள். 22.09.2021
பொருள்: | பள்ளிக் கல்வி – சேலம் மாவட்டம் – 2021-2022 ஆம் கல்வியாண்டில் அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் / நலத்துறை பள்ளிகளில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வாராந்திர தேர்வுகள் / சிறு தேர்வுகள் நடத்துதல் - சார்பு. |
பார்வை: | சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரை, நாள். 21.09.2021 |
*****
சேலம் வருவாய் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் / நலத்துறை பள்ளிகளில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு 2021-2022ஆம் கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்களில் வாராந்திர தேர்வுகள் / சிறு தேர்வுகள் நடத்திட கீழ்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
பள்ளி வேலை நாட்களில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் காலை 08.30 மணி முதல் பள்ளிக்கு வருகைபுரிவதால் தலைமையாசிரியரால் தயார் செய்யப்பட்ட வாராந்திர தேர்வுகள் / சிறு தேர்வுகள் கால அட்டவணையின்படி அன்றைய தேர்வுக்குரிய பாடத்தினை மாணவர்கள் அவரவர் வகுப்பறையில் அமர்ந்து படிக்கும் வகையில் தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் பள்ளி முடிந்தபின்னர் தினந்தோறும் ஒரு பாடத்திற்கு 30 மதிப்பெண்களுக்கு மேல் வினாத்தாள் தயாரித்து அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்திட வேண்டும்.
பள்ளி துவங்குவதற்கு முன்னரே மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிவதால் கொரோனா நோய்தொற்று சார்ந்த அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி வளாகத்தில் பின்பற்றிடும் வகையில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 08.30 மணி முதல் சுழற்சி முறையில் ஆசிரியர்களை வருகை புரிய தெரிவித்திட பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் எழுத மற்றும் வாசிக்க தெரியாத திறன் குறைந்த 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு, சார்ந்த பாட ஆசிரியர்கள் நன்றாக எழுத மற்றும் வாசிக்க தெரியத்தக்க வகையில் சிறப்பு பயிற்சிகள் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வுகள் நடத்தப்பட்ட பாடத்திற்கான விடைத்தாட்களை 2 நாட்களில் மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும். சார்ந்த பாட ஆசிரியர் அன்றைய தினமே மதிப்பெண்களை உரிய பதிவேட்டில் (இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் உள்ளவாறு) பதிவு செய்து கையொப்பமிட்டு, அப்பதிவேட்டில் தலைமையாசிரியரின் கையொப்பம் பெற்றிருத்தல் வேண்டும்.
பதிவேட்டின் முதல் பக்கத்தில் சார்ந்த ஆசிரியர் கடந்த மூன்றாண்டுகளின் தேர்ச்சி விவரத்தை கட்டாயமாக குறிப்பிட்டிருக்க வேண்டும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பொருளடக்க படிவத்தினை பூர்த்தி செய்து ஒவ்வொரு தேர்வும் முடிவுற்றபின் மாணவர்களின் பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களை ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி கோப்புகளாக பாட ஆசிரியர் பராமரித்து வைத்திடல் வேண்டும். ஆய்வு அலுவலர்கள் பள்ளியினை பார்வையிடும் பொழுது மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களுக்கான கோப்புகள் மற்றும் மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்ட பதிவேட்டினை முன்னிலைப்படுத்தப்படவேண்டும்.
தவிர்க்க முடியாத காரணத்தால் ஆசிரியர் விடுப்பு எடுக்க நேரிடின், சார்ந்த ஆசிரியரே உரிய மாற்று ஏற்பாட்டினை தலைமையாசிரியர் ஒப்புதலுடன் செய்திடல் வேண்டும்.
இச்செயல்முறைகளை தலைமையாசிரியர்கள் அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கைக்கு அனுப்பி கையொப்பம் பெற்றிருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வாராந்திர தேர்வுகள் / சிறுதேர்வினை எவ்வித சுணக்கமும் இன்றி செவ்வனே நடத்திட அனைத்து பாட ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு : படிவங்கள் ஒம்/-இரா.முருகன்
முதன்மைக் கல்வி அலுவலர்,
சேலம்.
பெறுநர்
· அனைத்து அரசு/ நகரவை / அரசு நிதியுதவி பெறும் / நலத்துறை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், சேலம் மாவட்டம்.
நகல்
· அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், சேலம் மாவட்டம். (உரிய தொடர் நடவடிக்கையின் பொருட்டு)
DOWNLOAD PROCEEDING IN PDF
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது