நாள் : 04-10-2021 முதல் 09-10-2021
வாரம் : முதல் வாரம் ( அக்டோபர் )
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு ( புத்தாக்கப் பயிற்சி)
பாடத்தலைப்பு : கட்டுரை எழுதுதல்,
நோக்கம் :
Ø
கட்டுரை எழுதும்
திறன் வளர்த்தல்
Ø
தலைப்பிற்கேற்ப பேசக் கூடிய திறன் வளர்த்தல்.
Ø
விளம்பரங்கள் தரும் செய்திகள் அறிந்து வினாக்களுக்கு விடையளிக்கும் திறன் வளர்த்தல்
கற்றல் விளைவுகள்:
Ø
படிப்பவர், எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனத்தில் கொண்டு
பயன் விளைக்கும் வகையில் எழுதுதல்.
Ø
பல்வேறு வகையான தலைப்புகளில் கருத்துகளைத் திரட்டிப்
பேசும் முறையறிந்து பேசுதல்.
Ø
விளம்பரங்களில் வரும் செய்திகளின் தன்மையை நுட்பமாக ஆய்வு
செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊக்கித்தலும்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø
கட்டுரை அமைப்பு முறையை அறிதல்
முன்னுரை |
பொருள் |
முடிவுரை |
Ø முதல் பகுதி Ø எழுதப் போகும் கருத்தின் சுருக்கம் அமையும் பகுதி |
Ø நடுப்பகுதி Ø கருத்தின் விளக்கம் எழுதும் பகுதி |
Ø இறுதிப் பகுதி Ø கருத்துகளின் தொகுப்பு எழுதும்
பகுதி |
Ø
கட்டுரையின் பொது வழிமுறைகள்
·
தலைப்பிற்குரிய செய்திகளை சேகரித்தல்
·
வரிசைப்படுத்துதல்
·
தலைப்பு அமைத்தல்
·
பத்தி பிரித்தல்
·
மேற்கோள், பழமொழி, உவமை, உருவகம் எழுதுதல்
·
தெளிவான கையெழுத்து, நடை அழகு
·
நிறுத்தற்குறியீடுச் சரியாகப் பயன்படுத்துதல்
·
நயமுற எடுத்துரைத்தல்
·
நீதிக்கருத்து. பொன்மொழி/ முழக்கத்தொடருடன் முடித்தல்
Ø
பேச்சின் கூறுகள் அறிதல்
எடுத்தல் |
தொடுத்தல் |
முடித்தல் |
1.பேச்சின் தொடக்கம் 2. கேட்போரை வயப்படுத்தும் வகையில்
பேச்சின் தொடக்கம் அமைதல் வேண்டும். |
1 .இடைப்பகுதி 2. தலைப்பிற்கேற்ப கருத்துகளைத்
தொடுத்து சுவைமிக்க வகையில் பேசுதல் வேண்டும். |
1. இறுதிப்பகுதி 2. பொருத்தமான கதை.கவிதை,உணர்ச்சியுடன்
பேசி முடித்தல் |
Ø
விளம்பரம் மூலம் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் அறிதல்
Ø
விளம்பரம் மூலம் மாணவர்கள் அடையும் உற்று நோக்கும் திறன்,
மையக் கருத்தறியும் திறன் ஆகியவற்றை அறிதல்
மதிப்பீடு:
1. கட்டுரையின் பொருளுரையில் இடம் பெறுவது யாது ?
2. கட்டுரை என்பது யாது?
3. பேச்சின் முக்கூறுகள் யாவை?
4. பேச்சினை எவ்வாறு முடிக்க வேண்டும்?
5. விளம்பரங்கள் மூலம் நாம் பெறுவது யாது?
தொடர்பணி:
Ø
ஒன்பதாம் வகுப்பில் உள்ள பாடப்பகுதியில் குறிப்பிட்ட தலைப்பின்
கீழ் கட்டுரை எழுதி வருமாறுக் கூறல்.
Ø
ஆசிரியர் தரும் குறிப்பிட்ட தலைப்பில் பேசுவதற்கு
ஏற்ற உரைக் குறிப்பு தயார் செய்து வருதல்.
Ø
தங்களுக்கு கிடைக்கும் விளம்பரத் துண்டறிக்கையைக் கொண்டு
அதில் காணும் செய்திகளின் நுட்பத்தை அறிந்து வினாக்கள் எழுதி வருதல்
குறிப்பு :
தமிழ்விதை தினசரி செய்ய
வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார்
செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு
மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும்
ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க. நன்றி, வணக்கம் – தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது