மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் கட்டுரைகள்
இயல்-7 வருணித்து எழுதுதல்
”எனது பயணம்”எனும் தலைப்பில் உங்களது பயணஅனுபவங்களை வருணித்து
எழுதுக.
ஏழைகளின்
ஊட்டி - ஏற்காடு
கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் ஏழைகளின் ஊட்டி
என அழைக்கப்படும் ஏற்காடுக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை
உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சேலம் புதிய பேருந்து
நிலையத்திலிருந்து பேருந்தில் சென்றோம். மலைகளின்
இருபுறமும் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளைக் காண இரு கண்கள் போதாது. அங்கு சென்ற
பின்
ஏற்காடு படகு இல்லம்,
சீமாட்டி இருக்கை,
பகோடா உச்சி,
பூங்கா,
காவேரி சிகரம்,
சேர்வராயன் மலை
உச்சி என அனைத்து இடங்களும் மனதை கொள்ளைக் கொள்கிறது. எத்தனை அழகு. என்றும் நினைவை
விட்டு அகலாது ஏற்காடு.
DOWNLOAD IN PDF
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது