நாள் : 11-10-2021 முதல் 16-10-2021
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு ( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : செய்யுள் நயம் பாராட்டல்
பக்க எண் : 49
நோக்கம் :
Ø செய்யுளை/கவிதையைப் பாராட்டும் திறன் பெறுதல்
கற்றல் விளைவுகள்:
Ø
பல்வேறு வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள்,
தொடர்கள்,மரபுத்தொடர்கள், ஆகியவற்றைப் புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்.
Ø
சொற்சித்திரத் திறனை நயம்படப் பாராட்டித் தனது கல்வி நிலைக்கு
ஏற்ப அதை வெளிப்படுத்துதல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø
நயம் என்பது அழகு.
Ø
செய்யுளில் அமைந்துள்ள நயங்களை எடுத்துக்காட்டுதல்
Ø
திரண்ட கருத்து : செய்யுளின் கருத்தினை வெளிப்படுத்துதல்
Ø
மையக் கருத்து : செய்யுளில் கூறப்பட்டுள்ள மைய நோக்கினை
அறிதல்
Ø
எதுகை : செய்யுளில் அடிகளிலும் சீர்களிலும் இரண்டாம் ஒன்றி வருவது
Ø
மோனை : செய்யுள் அடிகளில் சீர்களிலோ முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
Ø
இயைபு : செய்யுளின் அடி,சீர்களில் இறுதி எழுத்து, அசை,சீர் ஒன்றி வருவது இயைபு
Ø
முரண் : செய்யுளில் எதிர்ச்சொற்கள் அமைய வருவது.
Ø
அணி : ஒரு செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபடக் கூறுவது அணி.
வலுவூட்டல்:
Ø பாடப்பகுதியில் அமைந்துள்ள ஒரு செய்யுளினைக் கொண்டு நயங்களை தெளிபடக் கூறி பாடப்பொருளை
வலுவூட்டல்.
மதிப்பீடு:
1. மையக்கருத்து என்பது யாது?
2. எதுகை,மோனை – நயங்களை கூறுக.
3. பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகள் செய்தல்
தொடர்பணி:
Ø பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் செய்யுளினைத் தேர்வு செய்து நயங்களை பாராட்டி
எழுதி வருமாறுக் கூறல்
குறிப்பு :
தமிழ்விதை தினசரி செய்ய
வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார்
செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு
மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும்
ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க. நன்றி, வணக்கம் – தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது