நாள் : 11-10-2021 முதல் 16-10-2021
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இலக்கணப் பயன்பாடு - அணி
பக்க எண் : 44
Ø செய்யுளில் காணும் அணியை இனம் காணுதல்
கற்றல் விளைவுகள்:
Ø
மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம்பொழியில்
எழுதும் போது பயன்படுத்துதல்.
Ø
பாடல், கட்டுரை, கதை எழுதும் போது பல்வேறு புலப்பாட்டு
உத்திகளையும் முறைகளையும் இனம் கண்டு பயன்படுத்துதல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø
அணி – அழகு என்பது பொருள்
Ø
செய்யுளினை சொல்லாலும், பொருளாலும் அழகுபெறச் செய்தல்.
Ø
உவமை அணி : அணிகளுக்கெல்லாம் தாயாக விளங்குவது உவமை அணி.
Ø
உவமை அணி : உவம உருபு வெளிப்பட்டு வருவது.
Ø
உவம உருபுகள் : போல, புரைய, மான,கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர,அன்ன, இன்ன,அற்று
Ø
எடுத்துக்காட்டு உவமை
அணி : தொடர்களில் உவம உருபு
மறைந்து வந்தால் அதனை எடுத்துக்காட்டு உவமை அணி.
Ø
இல்பொருள் உவமை : இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாக்கிக்
காட்டுவது.
வலுவூட்டல்:
Ø பாடப்பகுதியில் உள்ள திருக்குறளில்/செய்யுளில் அணியைச்சுட்டி பாடப்பொருளை வலுவூட்டல்
மதிப்பீடு:
1. அணி என்ற சொல்லின் பொருள் என்ன?
2. அணி இலக்கணம் பற்றிக் கூறும் தொன்மையான நூல் எது?
3. உவம உருபுகளைத் தொடரில் அமைத்து எழுதுக.
அ. போல ஆ. புரைய இ. ஒப்ப ஈ. அன்ன
தொடர்பணி:
Ø பாடப்பகுதியில் உள்ள திருக்குறள் மற்றும் ஏதேனும் செய்யுளினை தேர்வு செய்து அதில் காணும் அணியின் வகையை எடுத்து எழுதி வருக.
PDF - FORMAT
குறிப்பு :
தமிழ்விதை தினசரி செய்ய
வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார்
செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு
மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும்
ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க. நன்றி, வணக்கம் – தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது