10TH - SLOW LEARNERS -REDUSE SYALLABUS - SPECIAL GUIDE - UNIT -2

WWW.THAMIZHVITHAI.COM 

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்புதமிழ்

இயல் - 2

உயிரின் ஓசை

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-        

1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

   உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

) உருவகம்,எதுகை   ) மோனை,எதுகை  ) முரண்,இயைபு ஈ) உவமை,எதுகை

2. பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ)அன்மொழித்தொகை) உம்மைத்தொகை

) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-              

1. நமக்கு உயிர் காற்று

  காற்றுக்கு வரம் மரம்மரங்களை

  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

v  மரம் வளர்ப்போம்;காற்றின் பயன் அறிவோம்

v  மரம் நடுவோம்;காற்றை பெறுவோம்

2. வசன கவிதைகுறிப்பு வரைக.

               உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

3. தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

v  .தண்ணீரைக் குடிஅவன் தண்ணீரைக் குடித்தான்

v  தயிரை உடைய குடம்கமலா தயிர்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.

) சிறுவினா                                                                                                                      1. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.

 

மல்லிகைப்பூ

இருபெயரொட்டு பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடுகளும்மாடுகளும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர்,குடிக்கின்றநீர்,குடிக்கும் நீர்

சுவர்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

 

நெடுவினாக்கள்

1. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

               வளரும் விழி வண்ணமேவந்து

  விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

               விளைந்த கலை அன்னமே

  நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

               நடந்த இளந்தென்றலேவளர்

  பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

               பொலிந்த தமிழ் மன்றமே

  - கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

மோனை நயம்:

               செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.

               லர்ந்தும்  லராத

               ளரும்     ண்ணமே

எதுகை நயம்:

               செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.

               ர்ந்தும்  ராத

சந்த நயம்:

               இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.

இயைபு நயம்:

               இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல் இயைபு நயம்.

               வண்ணமே

               அன்னமே

முரண் நயம்:

               முரண்பாடாக அமைவது முரண்.

                              மலர்ந்தும் × மலராத

                              விடிந்தும்  × விடியாத

பொருள் நயம்:

               காற்றோடு தமிழை சிறப்பித்து நல்ல பொருள் நயத்தோடு இப்பாடல் பாடப்பெற்றுள்ளது.

மொழியை ஆள்வோம்

இயல் -2

) தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக:-

               The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

விடை:

               பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.           

                                            

) சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:-                      

சொற்கள்

தொகை

தொடர்

இன்சொல்

பண்புத்தொகை

முகில் அனைவரிடமும் இன்சொல் பேசினான்

எழுகதிர்

வினைத்தொகை

வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து இன்பம் எழுகதிராய் வரும்

கீரிபாம்பு

உம்மைத்தொகை

நானும் அவனும் கீரியும் பாம்பும் போல இருப்போம்

பூங்குழல் வந்தாள்

அன்மொழித் தொகை

பூங்குழல் நந்தவனத்திற்கு வந்தாள்

மலைவாழ்வார்

வேற்றுமைத் தொகை

மலைவாழ்வார் காடுகளை பாதுகாக்கின்றனர்.

முத்துப்பல்

உவமைத் தொகை

அவள் முத்துப்பற்களால் சிரித்தாள்

 

) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-

முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

நறுமணம்

பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்

புதுமை

இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை.

காற்று

நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும்.

விண்மீன்

ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்

காடு

 

செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியவாய் இருக்கும் மலர்கள்; ஆல மலர்;பலா மலர்.

மலர் உண்டு;பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி,ஆலம்,கொழிஞ்சி,பலா.

பயன்பாடு நாற்றம்,மக்களது விருப்பில் இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி,எருக்கு,பூளை,குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

1. மலர் உண்டு; பெயரும் உண்டுஇரண்டு தொடர்களை ஒரு தொடராக்குக.

விடை: மலருக்கு பெயர் உண்டு

2. அரும்பாகி மொட்டாகி பூவாகி..... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.

விடை: அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்.

3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயங்களையும் எழுதுக.

விடை: 1. மல்லிகைப் பூ. – வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகிறது.

                2. சூரிய காந்திப் பூஎண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.

4. அரிய மலர்இலக்கணக் குறிப்புத் தருக.

விடை:  பெயரெச்சம்

5. தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.

விடை: இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மத்தை ஏற்றும்.

 DOWNLOAD IN PDF



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...