வாராந்திர தேர்வு விடைக்குறிப்புகள்
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.013186/அ5/2021 நாள். 22.09.2021
மேற்காணும் செயல்முறைகளின் படி 10,11,12 வகுப்புகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளப்படி வாராந்திர தேர்வுக்கான மாதிரித் தேர்வு வினாத்தாள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இது சேலம் மாவட்ட ஆசிரியர்கள் மட்டுமன்றி மற்ற மாவட்ட ஆசிரியர்களும் தத்தம் மாணவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏதுவாக இருக்கும்.
மேலும் இந்த வினாத்தாள் வடிவமைப்பானது புத்தாக்கப்பயிற்சியினை மையமாகக் கொண்டு அதன் அடிப்படையில் அதனோடு ஒத்துப் போகிற வினாக்களைத் தேர்வு செய்து 40 மதிப்பெண் கொண்ட வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.
வகுப்பு :10 வாரம் : 27-09-21 TO 01-10-21
பாடம் : தமிழ் மதிப்பெண் : 40
விடைக்குறிப்புகள்
வாரம் : இரண்டாம் வாரம் நாள் : 27-09-21
– 01-10-2021
பாடம்
: தமிழ் மொத்த
மதிப்பெண் : 40
அ. தொடருக்கு ஏற்ற தலைப்பைத்
தேர்ந்தெடுக்கவும்:- 5
× 1 = 5
1. மொட்டின்
வருகை
2. மிதக்கும்
வாசம்
3. உயிர்ப்பின்
ஏக்கம்
4. நீரின்
சிலிர்ப்பு
5. வனத்தின்
நடனம்
ஆ. வசன நடையில் எழுதுக
: மயில் 5
× 1 = 5
மாணவர்களின்
எழுதிய எண்ணங்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கவும்
இ. அறிவிப்பு பலகை:- 5 × 2 = 10
ஏதேனும்
5 எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
1.புயலின்
போது வெளியில் செல்ல வேண்டாம்
2. வெளியேற
நேர்ந்தால் ஆரம்ப கட்ட எச்சரிக்கையின் போதே வெளியேறவும்
3. தொலைபேசி,மின்சாதனங்கள்
பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
4. மாடியில்
இருப்பதைத் தவிர்த்து தளப்பகுதியிலேயே தங்கவும்.
5. மீனவர்கள்
கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
ஈ. செய்தியைப் படித்து
வினாக்களுக்கு விடையளி:- 2×5=10
அ.
1.
மலருக்கு பெயரும் உண்டு.
2. காய்
தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும்
3. பொருத்தமான
விடைக்கு மதிப்பெண் வழங்கவும்
4. குறிப்பு
பெயரெச்சம்
5. இலுப்பைப்
பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதரிப்பூ
குடிநீருக்கு தன் மணத்தை ஏற்றும்.
ஆ.
1. மீண்டும்
மீண்டும்
2. தொடர்ந்து
பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது
3. பெய்மழை
4. பெருவெடிப்பு
கொள்கை
5. நிலம்,நீர்,காற்றுநெருப்பு,ஆகாயம்,
ஆகியவை அடங்கிய சூழலே வாழ்வதற்கு ஏற்றதாகும்.
உ. உரையாடல் அமைக்க:- 1
× 5 = 5
சோலைக்காற்று
: மரங்கள்,செடிக்கொடிகள் நிறைந்த குளிர்ச்சியான இடம் எனது இடம்.
மின்விசிறி:
நான்கு சுவர்களுக்கு இடையே எனது இடம்
சோலைக்காற்று
: குளிர்ச்சி நிறைந்த காற்றையே நான் வீசுகிறேன்
மின் விசிறி
: நான் வெதுவெதுப்பான சூடான காற்றை வீசுகிறேன்.
சோலைக்காற்று
: மாலை நேரங்களில் பொழுது போக்கிற்காக தூய காற்றைப் பெற என் இருப்பிடம் வருகின்றனர்.
மின்விசிறி
: வீட்டில் இருப்பவர்கள், பணி செய்ப்வர்கள் என் இடம் நாடி வருகின்றனர்.
சோலைக்காற்று
: மின்சாரம் இல்லாத போதும் நாள் குளிர்ச்சியான காற்றுத்தருவேன்
மின்விசிறி:
மின்சாரம் இல்லாத போது என்னால் காற்று தர இயலாது.
ஊ. காட்சியைக் கண்டு வசனக்கவிதை / கவிதை எழுது. 1 × 5 = 5
ஏடு
எடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று
சொன்னது
இந்தக்
காட்சி காற்று என் தேவையை பற்றி எழுது
என்றது
மனிதன்
என் தவிப்பைப்
பற்றி
எழுது என்றான்
நான்
எழுதுகிறேன் காற்றே நம் சுவாசம் என்று
தயாரிப்பு
:
வெ.ராமகிருஷ்ணன்,
அ.உ.நி.பள்ளி,கோரணம்பட்டி,
சேலம்.
விடைக்குறிப்பை PDF
வடிவில் பதிவிறக்க
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது