நாள் : 18-10-2021 முதல் 23-10-2021
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : செய்யுள் நயம் பாராட்டல்,பாடல் பொருளை,
கதையை நேர்காணல் வடிவில் மாற்றுதல்நோக்கம் :
Ø
செய்யுளில் காணும் நயங்களை இனம் காணுதல்
Ø
தமது சொந்த அனுபவங்களைத் தமக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி
வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல்
கற்றல் விளைவுகள்:
Ø
செய்யுளின் சொற்சித்திரத் திறனை நயம்படப் பாராட்டித் தமது
கல்வி நிலைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்துதல்.
Ø
அறிந்திராத சூழல்களைப் பற்றிக் கற்பனை செய்தும் நிகழ்வுகள்
பற்றி மனத்தில் உருவகம் செய்தும் அவற்றைப் பற்றிச் சிந்தித்து எழுத்தின் வடிவில் வெளிப்படுத்துதல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø செய்யுள் நயம் பாராட்டுதலில் பின்வரும் கூறுகள் இன்றியமையாதவ
தலைப்பு
§ செய்யுளின் கருத்துக்கு ஏற்ப தலைப்பு எழுதுதல் வேண்டும்.
மையக் கருத்து
§ செய்யுளின் கருத்தின் மையநோக்கத்தை நன்கு அறிந்து சில சொற்றொடர்களில் எழுத வேண்டும்.
o தொடை நயம்
மோனை
o அடிதோறும், சீர் தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது.
எதுகை
o அடிதோறும்,சீர் தோறும் முதல் எழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
இயைபு
o அடிதோறும் சீரின் கடைசி எழுத்தோ,ஓசையோ,சொல்லோ ஒன்று போல வருவது
முரண்
o செய்யுளில் எதிர் சொற்கள் அமைவது
o
அணி நயம்
o
சொல்நயம்,பொருள்நயம்
o
சந்தநயம்
o
கற்பனை நயம்
Ø
பாடல் பொருளினை நன்கு படித்து பொருளுணர்தல்
Ø
செய்யுளின் உட்பொருளை கூர்ந்து நோக்குதல்
Ø
செய்யுளின் பொருளை அதன் மையக் கருத்து மாறாமல் நேர்காணல் வடிவில்
மாற்றுதல்
வலுவூட்டல்:
Ø
பயிற்சிப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்யுளுக்கு
மோனை,எதுகை,இயைபு நயம் சுட்டிக்காட்டுதல்.
Ø
பாடப்பகுதியில் உள்ள ஒரு செய்யுளுக்கு மாணவர்களை நயங்களை
கண்டறியச் செய்ய செய்தல்.
Ø
பயிற்சிப்புத்தகத்தில் உள்ள செய்யுளின் பொருளை அறிந்து
உரையாடல் வடிவில் மாற்றுதல்.
மதிப்பீடு:
1. மோனை என்பது குறித்து எழுதுக.
2. எதுகை என்பது யாது?
3. பாடலின் மையக் கருத்து எவ்வாறு அமைய வேண்டும்?
4. இயைபு நயம் குறித்து நீ அறிந்தது யாது?
தொடர்பணி:
Ø
பாடப்பகுதியில் உள்ள ஒரு செய்யுளுக்கு நயம் பாராட்டி
எழுதி வருமாறுக் கூறல்.
Ø
பாடப்பகுதியில் உள்ள ஒரு செய்யுளின் கருத்துக்கு உரையாடல்
அமைத்து எழுதுக.
குறிப்பு :
தமிழ்விதை தினசரி செய்ய
வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார்
செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு
மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும்
ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க. நன்றி, வணக்கம் – தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது