நாள் : 18-10-2021 முதல் 23-10-2021
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு ( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : உரைநடையைக் கடிதமாகவும், கருத்தைக்
கவிதையாகவும்மாற்றுதல், யாப்பு
பக்க எண் : 53-56
நோக்கம் :
Ø உரைநடையைப்
படித்து பொருள் உணர்தல்
Ø படித்தவற்றை
கவிதையாகவும், கடிதமாகவும் மாற்றுதல்
Ø யாப்பின்
உறுப்புகள் அறிதல்
Ø செய்யுளினை
அலகிடுதல்
கற்றல்
விளைவுகள்:
Ø எளிய
தலைப்புகளில் எழுதும் திறன் பெறுதல்
Ø ஒரு
குறிப்பிட்ட சூழலில் கூறிய சொற்களைப் பிறிதொரு சூழலில் தனது வழியில் பயன்படுத்துதல்
Ø செய்யுள்
உறுப்புகளை யாப்பிலக்கணத்தின் வழி அறிந்து அலகிடல்.
கற்றல்-கற்பித்தல்
செயல்பாடுகள் :
Ø ஒரு
குறிப்பிட்ட வடிவத்தில் கொடுக்கப்பட்ட செய்தியை உரையாடலாக, பேச்சுரையாக, தகவலாக,விளம்பரமாக
என்பன போன்ற பிற வடிவங்களில் மாற்றி எழுதுவது படைப்பாற்றலை வளர்க்கும்
Ø பிற
வடிவங்களில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை மாற்றுவதற்கான உத்திகள்
o அறிவிப்பைச்
செய்தியாக்கல்
o கடிதமாக்கல்
o உரையாடலாக்கல்
o கவிதையாக்குதல்
o கதையாக்குதல்
o செய்தியை
விளம்பரமாக்கல்
Ø மரபுகவிதைகளுக்கு
யாப்பிலக்கணம் மிகவும் இன்றியாமையாதது.
Ø எழுத்து,
அசை,சீர் வாய்ப்படுகளை அறிதல் அவசியம்.
Ø அசை
: நேர் – நிரை ( அட்டவணை வேண்டுமெனில் பயிற்சிப்புத்தகத்தில்
உள்ள அட்டவணையை எழுதிக் கொள்ளவும் )
Ø சீர்
– ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர் ( அட்டவணை
வேண்டுமெனில் பயிற்சிப்புத்தகத்தில் உள்ள அட்டவணையை எழுதிக் கொள்ளவும் )
Ø பயிற்சிப்புத்தகத்தில்
உள்ள குறள் எவ்வாறு அலகிடப்பட்டுள்ளது என விவரித்துக் கூறல்.
வலுவூட்டல்:
Ø அசை
சீர் வாய்பாட்டினை இசை இராகத்தில் மனதில் பதியும் படி பாடிக் காட்டுதல்
Ø குறளினை
அலகிடுதல்
Ø மாணவர்களை
அழைத்து கரும்பலகையில் எழுத வைத்தல்
Ø கருத்துக்
கொடுக்கப்பட்டுள்ள ஒரு செய்தியை / படத்தினை கவிதையாக மாற்றுதல்
மதிப்பீடு:
Ø நேரசைக்கான
விதிகள் கூறுக.
Ø நிரை
– நேர் – நேர் – இதன் வாய்ப்பாடு யாது?
Ø ஈரசைச்சீர்
வாய்ப்பாடுகள் யாவை?
தொடர்பணி:
Ø பாடப்புத்தகத்தில்
உள்ள ஒரு பத்தியைத் தேர்வு செய்து / படத்தினைக் கொடுத்து மாணவர்கள் விரும்பும் வடிவத்தில்
மாற்றி அமைத்து எழுதி வருமாறுக் கூறல்.
Ø உனக்கு
பிடித்த/ தெரிந்த 5 குறட்பாக்களை தேர்வு செய்து அலகிட்டு எழுதி வருமாறுக் கூறல்
குறிப்பு :
தமிழ்விதை தினசரி செய்ய
வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார்
செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு
மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும்
ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க. நன்றி, வணக்கம் – தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது