10TH - GRAMMER - Q& A - UNIT -1

 

www.thamizvithai.com

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு உகந்த முறையில் படித்து நன்மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமாய் தமிழ்விதை வாழ்த்துகிறது. அதற்காக தமிழ்விதை வலைதளத்தில் செய்தி எதுவும் பதிவிடாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது,. இந்த வலைதளம் மூலம் யாரேனும் ஒருவர் பயனடைந்தாலும் எனக்கு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காண்பது, பத்தாம் வகுப்பு இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்களுக்கும் அதற்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை புத்தக வினாக்களாக இல்லாமல் புத்தகத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. மீத்திற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இவை உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதனை கற்று மாணவர்கள் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகள்.

பத்தாம் வகுப்பு ( புதிய பாடத் திட்டம்)

இலக்கண வினாவிடைகள்

இயல் – 1

எழுத்து ,சொல்

1.சார்பெழுத்துக்கள் யாவை?


·       உயிர்மெய்

·       ஆய்தம்

·       உயிரளபெடை

·       ஒற்றளபெடை

·       குற்றியலுகரம்

·       குற்றியலிகரம்

·       ஐகாரக் குறுக்கம்

·       ஒளகாரக் குறுக்கம்

·       மகரக் குறுக்கம்

·       ஆய்தகுறுக்கம்

2. உயிரளபெடை என்பது யாது?

            செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். நெட்டெழுத்துக்கு இனமான குறில் எழுத்துகள் அவற்றின் பின்னால் வரும்.

3. செய்யுளிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.

            செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை எனப்படும்.

.கா:

            ஓஒதல் வேண்டும்மொழி முதல்

            உறாஅர்க்கு  உறுநோய்மொழியிடை

            நல்ல படாஅ பறைமொழியிறுதி

4. இன்னிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக:-

            செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை.

            .கா:

            கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே

            எடுப்பதூஉம் எல்லாம் மழை

5. ஒற்றளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.

            செய்யுளில் ஓசை  குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளான ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை.

.கா:    எஃஃகிலங்கிய கையராய் இன்னுயிர்

            வெஃஃகுவார்க் கில்லை வீடு

6. சொல் என்றால் என்ன? அதன் இயல்புகள் யாவை?

            ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல்.

·       இரு திணைகள் ஐந்து பால்களை குறிக்கும்.

·       மூவகை இடங்களிலும் வரும்.

·       உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வரும்.

·       வெளிப்படையாகவும், குறிப்பாகவும் வரும்.

7. சொல்லிசை அளபெடை என்றால் என்ன?

            செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.

            உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

            வரனசைஇ இன்னும் உளேன்.

நசைவிருப்பம்; விரும்பி என்னும்  பொருள் தருவதற்காக நசைஇ என அளபெடுத்தது. பெயர்ச் சொல், வினை அடையாக மாறியது.

8. பொதுமொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக:-

ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொது மொழி எனப்படும்.

            வேங்கைவேங்கை என்னும் மரத்தை குறிக்கிறது.

            வேங்கைவேம் + கை  என தொடர் மொழியாகப் பிரிந்து வேகின்ற கை என பொருள் தரும்.

இது இரு தொடர்களுக்கும் பொதுவாய் அமைந்து பொதுமொழியாக இருக்கிறது.

9. தொழிற்பெயர் என்றால் என்ன?

            ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயர் எண்,காலம்,இடம்,பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது. .கா : ஈதல், நடத்தல்

10 தொழிற்பெயர்க்கும், வினையாலணையும் பெயர்க்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

தொழிற்பெயர்

வினையாலணையும் பெயர்

வினை,பெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும்.

தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்.

காலம் காட்டாது

காலம் காட்டும்

படர்க்கைக்கே உரியது.

மூவிடத்திற்கும் உரியது

.கா: பாடுதல், நடத்தல்

.கா: பாடியவன் , நடப்பவர்.

           

 

 

     

 

 

 

11. விகுதி பெற்ற தொழிற் பெயர்கள் என்றால் என்ன?

            வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற் பெயர்கள் ஆகும்.

வினையடி

விகுதி

தொழிற்பெயர்

நட

தல்

நடத்தல்

ஆள்

அல்

ஆளல்

வாழ்

கை

வாழ்க்கை

           

                                   

 

 

12. எதிர்மறை தொழிற் பெயர் என்றால் என்ன?

            எதிர்மறை பொருளில் வருவது எதிர்மறை தொழிற்பெயர்.

            .கா: நடவாமை.

13. தனிமொழி என்றால் என்ன?.கா.தருக:-

            ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனிமொழி.

            .கா: கண்

 

14. தொடர் மொழி என்றால் என்ன? .கா.தருக:-

            இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர் மொழி.

            .கா: கண்ணன் வந்தான்.

15. முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன?

            விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயராகும்.

            .கா: தட்டு ,உரை,அடி

            இச்சொற்கள் முறையே தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள்படும் போது முதனிலைத்

            தொழிற்பெயர்களாகின்றன.

16. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன?

            விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்களாகும்.

            .கா:

தொழிற்பெயர்

முதனிலைத் தொழிற் பெயர்

முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

கெடுதல்

கெடு

கேடு

சுடுதல்

சுடு

சூடு

           

 

           

                       

17. வினையாலணையும் பெயரை விளக்குக:-

·       ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்.

·       தன்மை,முன்னிலை,படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.

.கா:

                 வந்தவர் அவர் தான், பொறுத்தார் பூமி ஆள்வார்.



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...