கொராணாக் காரணமாக நீண்டண்ட இடைவெளிக்குப் பின் பள்ளி ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை செப்டம்பர் 1 முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி கற்றல் வகுப்பு நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகிறது. நாளது வரை மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை பயின்று வந்தனர். தற்சமயம் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் 15 நாட்களுக்கு பாடங்கள் நடத்தப்படக் கூடாது. மன மகிழ் ஊட்டும் நிகழ்வுகளை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நடத்த வேண்டிய புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் வழங்கி மாணவர்கள் பெற்று இருக்க வேண்டிய அடிப்படை திறன்களை பட்டியலிட்டு அதனை புத்தகமாக வெளியிட்டது. அதனை பின் பற்றி தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் அந்த கட்டகத்தில் பெற்று இருக்க வேண்டிய திறன்களை கற்பித்து வருகிறார்கள். இதில் மாணவர்களின் திறனுக்கு ஏற்றவாறு அந்த கட்டகத்தின் பயிற்சியினை வழங்கலாம் என அரசு அறிவித்தது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் / ஆங்கிலம் பாடத்தினை எவ்வாறு பயில்கிறார்கள் என்பதனை அறிய அனைத்து ஆசிரியர்களும் தமது மாணவர் நிலையினை அறிந்து கொள்ளுதல் அவசியம். சில மாணவர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு நன்றாக வாசிப்பர், சிலர் எழுத்துகளை கூட்டி வாசிப்பர், சிலர் எழுத்துகளே தெரியாத நிலையில் இருப்பர். மாணவர்களின் நிலையினை கண்டறிந்து மாணவர்களின் நிலைக்கேற்றவாறு பயிற்சி வழங்குதல் அவசியமாகிறது.
அவ்வாறு மாணவர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கிட பதிவேடு பராமரிப்பது அவசியமாகிறது. அந்த வகையில் இந்த வலைதளத்தில் மாணவர்களின் வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன் அறிய இந்த பதிவேடு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆசிரியர்கள் இந்த பதிவேட்டினை கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கி அவர்களின் கற்றலை மேம்படுத்திடவும்.
குறிப்பு :
இந்த பதிவேடு கொராணாவிற்கு முன் நமது வட்டார வள மையம் மூலம் ஆசிரிய பயிற்றுநர்கள் பள்ளிக்கு வருகைப் புரிந்து மாணவர்களின் கற்றல் அடைவை சோதித்தறிவும் பதிவேடு தான் இது. சிறிது மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
வாசித்தல், எழுதுதல் திறன் பதிவேடு பெற
கீழே உள்ள DOWNLOAD என்பதனைச் சொடுக்கவும்
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது