10TH - GRAMMER - Q& A - UNIT -2

  

www.thamizvithai.com

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு உகந்த முறையில் படித்து நன்மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமாய் தமிழ்விதை வாழ்த்துகிறது. அதற்காக தமிழ்விதை வலைதளத்தில் செய்தி எதுவும் பதிவிடாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது,. இந்த வலைதளம் மூலம் யாரேனும் ஒருவர் பயனடைந்தாலும் எனக்கு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காண்பது, பத்தாம் வகுப்பு இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்களுக்கும் அதற்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை புத்தக வினாக்களாக இல்லாமல் புத்தகத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. மீத்திற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இவை உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதனை கற்று மாணவர்கள் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகள்.

பத்தாம் வகுப்பு ( புதிய பாடத் திட்டம்)

இலக்கண வினா – விடைகள்

இயல் – 2

தொகை நிலைத் தொடர்கள்

1. சொற்றொடர் என்றால் என்ன?

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.

.கா:  நீர் பருகினான்.

2. தொகை நிலைத் தொடர் என்றால் என்ன?

            பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச் சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபுகளோ வினை,பண்பு ஆகியவற்றின் உருபுகளோ மறைந்து வருவது தொகைநிலைத் தொடர் ஆகும்.

     .கா: கரும்பு தின்றான். – கரும்பைத் தின்றான்.

 ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.

 3. தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

¯ தொகை நிலைத் தொடர் ஆறு வகைப்படும்.


¯ வேற்றுமைத் தொகை

¯ வினைத்தொகை

¯ பண்புத் தொகை

¯ உவமைத் தொகை

¯ உம்மைத் தொகை

¯ அன்மொழித் தொகை


 

4. வேற்றுமை தொகை என்றால் என்ன?

            ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் ( ,ஆல்,கு,இன்,அது,கண்) ஆகியவற்றில் ஒன்று மறைந்து வருவது வேற்றுமைத் தொகை ஆகும்.

.கா: வீடு கட்டினான்வீட்டைக் கட்டினான். ( உருபு)

5. உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை என்பது யாது?

¯ ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே.

¯ .கா: தமிழ்த் தொண்டு ( தமிழுக்குச் செய்யும் தொண்டு ) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

6. வினைத் தொகை என்பது யாது?

¯ காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது வினைத் தொகை.

¯ காலம் கரந்த பெயரெச்சமே  வினைத்தொகை

¯ .கா:  ஊறுகாய்

7. பண்புத் தொகை என்றால் என்ன?

                                  நிறம்,வடிவம்,சுவை,அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில்மைஎன்னும் பண்பு விகுதியும்ஆகிய, ஆனஎன்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத் தொகை எனப்படும்.

8. இருபெயரொட்டுப் பண்புத் தொகையை விளக்குக:-

             சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில்ஆகியஎன்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத் தொகை.

.கா:

      சாரைப் பாம்புசாரை என்னும் சிறப்புப் பெயர் வந்து சாரை ஆகிய பாம்பு என இரு பெயரொட்டாக வந்துள்ளது.

9. உவமைத் தொகை என்றால் என்ன?

          உவமைக்கும் பொருளுக்கும் ( உவமேயம் ) இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமைத் தொகை எனப்படும்.

.கா: மலர்க்கை ( மலர் போன்ற கை )

10. உம்மைத் தொகை என்றால் என்ன?

¯ இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும்உம்என்னும் இடைச் சொல் மறைந்து வருவது உம்மைத் தொகையாகும்.

¯ உம்மைத் தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்

¯ .கா: அண்ணன் தம்பி

11. அன்மொழித் தொகை என்றால் என்ன?

     வேற்றுமை, வினை,பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும்.

.கா: சிவப்புச் சட்டை பேசினார்.

 சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார் எனத் தொகை நிலைத் தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகிறது.



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...