10TH - GRAMMER - Q& A - UNIT -5

 www.thamizvithai.com


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு உகந்த முறையில் படித்து நன்மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமாய் தமிழ்விதை வாழ்த்துகிறது. அதற்காக தமிழ்விதை வலைதளத்தில் செய்தி எதுவும் பதிவிடாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது,. இந்த வலைதளம் மூலம் யாரேனும் ஒருவர் பயனடைந்தாலும் எனக்கு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காண்பது, பத்தாம் வகுப்பு இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்களுக்கும் அதற்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை புத்தக வினாக்களாக இல்லாமல் புத்தகத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. மீத்திற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இவை உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதனை கற்று மாணவர்கள் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகள்.

பத்தாம் வகுப்பு ( புதிய பாடத் திட்டம்)

இலக்கண வினா – விடைகள்

இயல் – 5

வினா - விடை வகைகள் 

பொருள்கோள்

  1. வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

     வினா ஆறு வகைப்படும். அவை


? அறிவினா

? அறியா வினா

? ஐய வினா

? கொளல் வினா

? கொடை வினா

? ஏவல் வினா


 2. அறி வினா, அறியா வினாவிளக்குக:-

 

அறிவினா

அறியா வினா

தான் விடை அறிந்திருந்தும் அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது.

.காமாணவரிடம்இந்த கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் வினவுவது

தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது.

.கா: ஆசிரியரிடம்இந்த கவிதையின் பொருள் யாது?” என மாணவர் வினவுவது.

 

  3. கொளல் வினா, கொடை வினாவிளக்குக:-

 

கொளல் வினா

கொடை வினா

தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது.

.காநூலகரிடம்அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள் இருக்கிறதா?” என வினவுவது.

பிறருக்கு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது.

.கா: என்னிடம்இரண்டு எழுதுகோல் உள்ளது. உன்னிடம் உள்ளதா?” என்று கொடுப்பதற்காக வினவுதல்.

 

 

 4. ஐய வினா, ஏவல் வினாவிளக்குக:-

 

ஐய வினா

ஏவல் வினா

ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது.

.காஅங்கு இருப்பதுபாம்போ? கயிறோ?” என வினவுவது.

ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது.

.கா: நீ கடைக்குச் செல்கிறாயா? என்று வினவி வேலையைச் சொல்லுதல்..

 

   5. விடையின் வகைகள் யாவை?


? சுட்டு விடை

? மறை விடை

? நேர் விடை

? ஏவல் விடை

? வினா எதிர் வினாதல் விடை

? உற்றது உரைத்தல் விடை

? உறுவது கூறல் விடை

? இனமொழி விடை

   6. விடையின் வேறு பெயர்கள் யாவை?

            இறை , செப்பு , பதில்

   7. வெளிப்படை விடைகள் யாவை?

? சுட்டு விடை

? மறை விடை

? நேர் விடை

   8. குறிப்பு விடைகள் யாவை?

? ஏவல் விடை

? வினா எதிர் வினாதல் விடை

? உற்றது உரைத்தல் விடை

? உறுவது கூறல் விடை

? இனமொழி விடை

 

 9. வெளிப்படை விடைகளை விளக்குக:-

 

சுட்டு விடை

சுட்டிக் கூறும் விடை

சென்னைக்கு வழி யாதுஎன்ற வினாவிற்குஇதுஎன சுட்டிக் கூறுதல்.

மறை விடை

மறுத்து கூறும் விடை

கடைக்குப் போவாயா?”  வினாவிற்குபோகமாட்டேன்எனக் கூறுவது.

நேர் விடை

உடன்பட்டுக் கூறும் விடை

இது செய்வாயா?” வினாவிற்குசெய்வேன்எனக் கூறுவது.

 

 








10. குறிப்பு விடைகளை விளக்குக:-


ஏவல் விடை

மறுப்பதலை ஏவுதலாகக் கூறும் விடை

இது செய்வாயா? வினாவிற்குநீயே செய்என ஏவிக்கூறுவது

வினா எதிர் வினாதல் விடை

வினாவிற்கு விடையாக வினாவைக் கேட்பது.

என்னுடன் ஊருக்கு வருவாயா? வினாவிற்குவராமல் இருப்பேனா?” எனக் கூறுவது.

உற்றது உரைத்தல் விடை

வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல்

நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குகால் வலிக்கிறதுஎன உற்றதை உரைப்பது.

உறுவது கூறல் விடை

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்

நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குகால் வலிக்கும்என உறுவதை உரைப்பது.

இனமொழி விடை

வினாவிற்கு விடையாக  இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்.

பாடத் தெரியுமா?” வினாவிற்குஆடத் தெரியும்என கூறுவது.

           

 

                                   

                                                                                                                                                                                                                                                                                                                       

  11. பொருள் கோள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ, மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப்பொருள்         கோள்என்று பெயர். பொருள்கோள் எட்டு வகைப்படும்.


? ஆற்று நீர்ப் பொருள்கோள்

? மொழிமாற்று பொருள்கோள்

? நிரல் நிறைப் பொருள்கோள்

? விற்பூட்டுப் பொருள்கோள்

? தாப்பிசைப் பொருள்கோள்

? அளைமறிபாப்புப் பொருள்கோள்

? கொண்டுகூட்டுப் பொருள்கோள்

? அடிமாற்றுப் பொருள்கோள்


 

   12. ஆற்று நீர் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

ஆற்று நீரின் போக்கைப் போல செய்யுளில் நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ஆற்று நீர் பொருள்கோள்  எனப்படும்.

.கா :

             சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்

             மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்

             செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்

             கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே

v சீவக சிந்தாமணி

நெற்பயிர் கருவுற்ற பச்சைப் பாம்பின் வடிவம்போல் கருக்கொண்டு,பின்பு கதிர் விட்டு, செல்வம் சேர்ந்தவுடன் பண்பற்ற மக்கள் பணிவின்றித் தலை நிமிர்ந்து நிற்பது போல் குத்திட்டு நின்று, முடிவில் கதிர் முற்றியவுடன் கற்றவர்கள் வணங்குதல் போல் வளைந்து காய்த்தன.

 

நெல் என்னும் எழுவாய் அதன் தொழில்களான இருந்து, ஈன்று,நிறுவி,இறைஞ்சி என்னும் வினையெச்சங்களைப் பெற்று காய்த்தவே என்னும் பயனிலையை கொண்டு முடிந்துள்ளது. பாடல் தொடக்கம் முடிவு வரை ஆற்றின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளும் படி அமைந்துள்ளது.

 

   13. நிரல் நிறை பொருள்கோள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல் நிறையாக ( வரிசையாக ) அமைந்து வருவது நிரல் நிறை பொருள்கோள் எனப்படும். இஃது இரண்டு வகைப்படும்.

1. முறை நிரல் நிறை பொருள்கோள்

2. எதிர் நிரல் நிறை பொருள்கோள்

 

   14. முறை நிரல் நிறை பொருள்கோளை எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச் சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப் படியே நிறுத்திப் பொருள் கொள்ளும் முறைக்கு முறை நிரல் நிறை பொருள்கோள் என்று பெயர்.

 

.கா:

            கொடி குவளை கொட்டை நுசுப்பு உண் கண்மேனி

இவ்வடியில் கொடி,குவளை,கொட்டை என்ற எழுவாய்ப் பெயர்ச் சொற்களை வரிசைப்படுத்தி அவற்றிற்குரிய பயனிலையாக நுசுப்பு,கண்,மேனி என வரிசைப்படுத்தியுள்ளார்.

கொடி நுசுப்பு, குவளைகண், கொட்டைமேனி எனப் பொருள் கொள்ள வேண்டும்.

 

  15. எதிர் நிரல் நிறை பொருள்கோளை எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

செய்யுளில் எழுவாய்களை வரிசைப் படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராக்க் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல் நிறை பொருள்கோள் ஆகும்.

.கா:

            விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

            கற்றாரோடு ஏனை யவர்.

இக்குறளில் விலங்க்கு,மக்கள் என எழுவாய்களை வரிசைப் படுத்திவிட்டு அடுத்த அடியில் பயனிலைகளாக் கற்றார்,கல்லாதார் என வரிசைப்படுத்தியுள்ளார். இவற்றை கற்றார் மக்கள் என்றும், கல்லாதார் ஏனையர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகப் பொருள் கொள்ள வேண்டும்.

 

  16. கொண்டுக் கூட்டுப் பொருள்கோளை எடுத்துக்காட்டுடன் விவரி:-

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டுக் கூட்டுப் பொருள்கோள் ஆகும்.

            .கா:

                        ஆலத்து மேல குவளை குளத்துள

                        வாலின் நெடிய குரங்கு

v மயிலை நாதர் உரை.

மேற்கொண்ட பாடலை அப்படியே  பொருள் கொண்டால் புரியாது. ஆலத்து மேல குரங்கு , குளத்துல குவளை என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள் அமைந்திருப்பாதால் இது கொண்டுக் கூட்டுப் பொருள்கோள் ஆகும்.

 




About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...