ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு உகந்த முறையில் படித்து நன்மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமாய் தமிழ்விதை வாழ்த்துகிறது. அதற்காக தமிழ்விதை வலைதளத்தில் செய்தி எதுவும் பதிவிடாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது,. இந்த வலைதளம் மூலம் யாரேனும் ஒருவர் பயனடைந்தாலும் எனக்கு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காண்பது, பத்தாம் வகுப்பு இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்களுக்கும் அதற்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை புத்தக வினாக்களாக இல்லாமல் புத்தகத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. மீத்திற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இவை உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதனை கற்று மாணவர்கள் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகள்.
பத்தாம் வகுப்பு ( புதிய பாடத் திட்டம்)
இலக்கண வினா – விடைகள்
இயல் – 6
அகப்பொருள் இலக்கணம்
1. பொருள் என்பது யாது ? அதன் வகைகள் யாவை?
பொருள் என்பது ஒழுக்கமுறை. அஃது இரு வகைப்படும்.
1. அகப் பொருள்
2. புறப்பொருள்
2. அகத்திணை என்றால் என்ன?
அன்புடைய தலைவன் , தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது அகத்திணை.
3. அன்பின் ஐந்திணைகள் யாவை?
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
5. பாலை
4. முதற் பொருள் என்பது யாது?
நிலமும் , பொழுதும் முதற் பொருள்.
5. ஐவகை நிலங்கள் யாவை?
திணை
நிலம்
குறிஞ்சி
மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை
காடும் காடு சார்ந்த இடமும்
மருதம்
வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல்
கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை
சுரமும் சுரம் சார்ந்த இடமும்
6. பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?.
பொழுது இரு வகைப்படும். அவை , 1. பெரும் பொழுது
2. சிறு பொழுது.
7. பெரும் பொழுது என்றால் என்ன? அதன் கூறுகள் யாவை?
ஒரு ஆண்டின் ஆறு கூறுகளைப் பெரும் பொழுது என்பர்.
கார்காலம்
ஆவணி,புரட்டாசி
குளிர் காலம்
ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக்காலம்
மார்கழி, தை
பின்பனிக்காலம்
மாசி, பங்குனி
இளவேனிற்காலம்
சித்திரை, வைகாசி
முதுவேனிற் காலம்
ஆனி,ஆடி
8. சிறு பொழுது எனபது யாது ? அதன் கூறுகள் யாவை?
ஒரு நாளின் ஆறு கூறுகளைச் சிறு பொழுது என்பர்.
காலை
காலை 6 மணி முதல் 10 மணி வரை
நண்பகல்
காலை 10 மணி முதல் 2 மணி வரை
எற்பாடு
பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
மாலை
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
யாமம்
இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
வைகறை
இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
9. ஐந்திணைக்குரிய பெரும் பொழுது, சிறு பொழுதுகள் யாவை?
திணை
பெரும் பொழுது
சிறு பொழுது
குறிஞ்சி
குளிர்காலம்,முன்பனிக்காலம்
யாமம்
முல்லை
கார்காலம்
மாலை
மருதம்
ஆறு பெரும் பொழுதுகள்
வைகறை
நெய்தல்
ஆறு பெரும் பொழுதுகள்
எற்பாடு
பாலை
இளவேனில்,முதுவேனில்,பின்பனி
நண்பகல்
10. ஒரு நிலத்தின் கருப் பொருள்கள் யாவை?
ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள் , உணவு , விலங்கு இவையெல்லாம் கருப் பொருள்கள்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது