ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு உகந்த முறையில் படித்து நன்மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமாய் தமிழ்விதை வாழ்த்துகிறது. அதற்காக தமிழ்விதை வலைதளத்தில் செய்தி எதுவும் பதிவிடாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது,. இந்த வலைதளம் மூலம் யாரேனும் ஒருவர் பயனடைந்தாலும் எனக்கு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காண்பது, பத்தாம் வகுப்பு இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்களுக்கும் அதற்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை புத்தக வினாக்களாக இல்லாமல் புத்தகத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. மீத்திற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இவை உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதனை கற்று மாணவர்கள் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகள்.
பத்தாம் வகுப்பு ( புதிய பாடத் திட்டம்)
இலக்கண வினா – விடைகள்
இயல் – 4
பொது
1. இரு திணை விளக்குக:-
உயர்திணை,அஃறிணை
உயர்திணை : ஆற்றிவுடைய மக்களை குறிப்பது.
அஃறிணை : மக்களை
தவிர்த்து மற்ற உயிரினங்களையும், உயிரற்ற பொருட்களையும் குறிப்பது.
2. ஐம்பால் என்பது யாது
? அதன் வகைகள் யாவை?
? பால்
என்பது திணையின் உட்பிரிவு.( பால் – பகுப்பு, பிரிவு )
? இது
ஐந்து வகைப்படும்.
? உயர்திணை
– ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
? அஃறிணை
– ஒன்றன்பால்
பலவின பால்
3. உயர்திணை மற்றும் அஃறிணை பால்
பகுப்புகள் யாவை?
உயர்திணை பால் பகுப்புகள்:
ஆண்பால் – வீரன்,அண்ணன்,அப்பா
பெண்பால் – அம்மா, கண்ணகி, மாணவி
பலர்பால் – மாணவர்கள்,ஆடவர்
அஃறிணை
பால் பகுப்புகள் :
ஒன்றன்
பால்
– யானை,புறா,மலை
பலவின் பால் – பசுக்கள், மலைகள்
4. மூவிடங்களை விளக்குக:-
5. வழு, வழாநிலை,வழுவமைதி – விளக்குக:-
வழு |
இலக்கணமுறையின்றிப்
பேசுவதும்,எழுதுவதும் |
வழாநிலை |
இலக்கண
முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் ,எழுதுவதும் |
வழுவமைதி |
இலக்கணமுறைப்படி
பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது. |
6.
திணை,பால்,இடம்,காலம்,மரபு காணப்படும் வழுவமைதியை விளக்குக.
|
வழுவமைதி |
உதாரணம் |
திணை
வழுவமைதி |
அஃறிணையை
உயர்திணையாக கொள்ளல் உயர்திணையை
அஃறிணையாக கொள்ளல் |
“என் அம்மை வந்தாள்” என உவப்பின் காரணமாக மாட்டைப் பார்த்து
கூறுவது. |
பால்
வழுவமைதி |
பெண்பாலை, ஆண்பாலாக கொள்ளல். ஆண்பாலை,பெண்பாலாக கொள்ளல். |
வாடா
இராசா,வாடா கண்ணா என்று தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது |
இட வழுவமைதி |
தன்மையினை
படர்க்கை இடத்தில் கூறுவது |
மாறன்
என்பவன் தன்னைப் பற்றி பிறரிடம் “ இந்த மாறன் ஒருநாளும்
பொய் கூறமாட்டான்” |
கால
வழுவமைதி |
ஒரு
காலத்திற்குரிய சொல்லை வேறொரு காலத்திற்குரிய சொல்லாக கருதுவது |
குடியரசுத்
தலைவர் நாளை தமிழகம் வருகிறார். இத் தொடர் குடியரசுத் தலைவர் நாளை
தமிழகம் வருவார் என அமைதல் வேண்டும். |
மரபு
வழுவமைதி |
ஏதேனும்
ஒரு காரணம் பற்றி மரபு மாறி வழங்கி ஏற்றுக் கொள்ளுதல் |
கத்துங்
குயிலோசை சற்றே வந்து காதிற் பட வேணும் – பாரதியார் குயில்
கூவும் என்பது மரபு. |
7. வழு ,வழாநிலை வேறுபாடு தருக:-
|
வழு |
வழாநிலை |
திணை |
செழியன் வந்தது |
செழியன் வந்தான் |
பால் |
கண்ணகி உண்டான் |
கண்ணகி உண்டாள் |
இடம் |
நீ வந்தேன் |
நீ வந்தாய் |
காலம் |
நேற்று வருவான் |
நேற்று வந்தான் |
வினா |
ஒரு விரலைக்
காட்டிச் சிறியதோ?
பெரியதோ? என்று கேட்டல் |
இரு விரல்களைக்
காட்டி எது சிறியது? எது பெரியது? என்று கேட்டல். |
விடை |
கண்ணன் எங்கே
இருக்கிறார்?
என்ற வினாவிற்கு கண்ணாடி பைக்குள் இருக்கிறது என விடையளித்தல் |
கண்ணன் எங்கே
இருக்கிறார்?
என்ற வினாவிற்கு கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என விடையளித்தல். |
மரபு |
தென்னை மரங்கள்
உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல். |
தென்னை மரங்கள்
உள்ள பகுதியைத் தென்னந்தோப்பு என்று கூறுதல். |
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது