10TH - GRAMMER - Q& A - UNIT -8

 www.thamizvithai.com


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு உகந்த முறையில் படித்து நன்மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமாய் தமிழ்விதை வாழ்த்துகிறது. அதற்காக தமிழ்விதை வலைதளத்தில் செய்தி எதுவும் பதிவிடாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது,. இந்த வலைதளம் மூலம் யாரேனும் ஒருவர் பயனடைந்தாலும் எனக்கு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காண்பது, பத்தாம் வகுப்பு இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்களுக்கும் அதற்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை புத்தக வினாக்களாக இல்லாமல் புத்தகத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. மீத்திற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இவை உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதனை கற்று மாணவர்கள் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகள்.

பத்தாம் வகுப்பு ( புதிய பாடத் திட்டம்)

இலக்கண வினா – விடைகள்

இயல் – 8

பா வகை - அலகிடுதல்

1. யாப்பின் உறுப்புகள் யாவை?

            எழுத்து, அசை,சீர்,தளை,அடி,தொடை

2. பா எத்தனை வகைப்படும் அவை யாவை?

            பா நான்கு வகைப்படும்.

            1. வெண்பா

            2. ஆசிரியப்பா

            3. கலிப்பா

            4. வஞ்சிப்பா

3. பா-வகையின் ஓசைகள் யாவை?

வெண்பா

செப்பலோசை

ஆசிரியப்பா

அகவலோசை

கலிப்பா

துள்ளலோசை

வஞ்சிப்பா

தூங்கலோசை

4. செப்பலோசை குறித்து எழுதுக:-

1. செப்பலோசை வெண்பாவிற்கு உரியது.

2. அறம் கூறும்.

3. குறளும், நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளது.

5. அகவலோசை குறித்து எழுதுக:-

            1. அகவலோசை ஆசிரியப்பாவிற்கு உரியது.

            2. இலக்கணக் கட்டுக்கோப்பு குறைவாகவும்,

            3. கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா.

            4. சங்க இலக்கியம் , சிலப்பதிகாரம் , பெருங்கதை , மணிமேகலை ஆசிரியப்பாவால் ஆனது.

6. துள்ளலோசை குறித்து எழுதுக:-

            1. கலிப்பாவிற்கு உரியது.

            2. செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது.

7. தூங்கல் ஓசை குறித்து எழுதுக:                                              

            1.வஞ்சிப்பாவிற்கு உரியது.

            2. சீர் தோறும் துள்ளாமல் வருவது.

8. வெண்பாவின் வகைகள் யாவை?

            1. குறள் வெண்பா

            2. சிந்தியல் வெண்பா

            3. நேரிசை வெண்பா

            4. இன்னிசை வெண்பா

            5. பஃறொடை வெண்பா

9. ஆசிரியப்பாவின் வகைகள் யாவை?

            1. நேரிசை ஆசிரியப்பா                          

            2. இணைக்குறள் ஆசிரியப்பா

            3. நிலை மண்டில ஆசிரியப்பா

            4. அடி மறி மண்டில ஆசிரியப்பா.

10. வெண்பாவின் பொது இலக்கணம் பற்றி எழுதுக:-

ஓசை

செப்பல் பெற்று வரும்

சீர்

ஈற்றடி முச்சீராகவும்,ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும்.

இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.

தளை

இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும்.

அடி

இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும்.( கலிவெண்பா பதிமூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.)

முடிப்பு

ஈற்றுச் சீர் நாள்,மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியும்.

11. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பற்றி எழுதுக:-

ஓசை

அகவலோசை பெற்று வரும்

சீர்

ஈரசைச் சீர் மிகுதியாகவும் , காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.

தளை

ஆசிரியத் தளை மிகுதியாகவும் , வெண்டளை , கலித்தளை ஆகியவை விரவியும் வரும்

அடி

மூன்றடி முதல் எழுதுபவர் மன்நிலைக்கேற்ப வரும்.

முடிப்பு

ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.

12. குறள் வெண்பாவின் இலக்கணம் யாது?

            1.  வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று வரும்.

            2.  இரண்டு அடிகளாய் வரும்.

            3.  முதலடி நான்கு சீராகவும் ( அளவடி ) ,

            4.  இரண்டாம் அடி மூன்று சீராகவும் ( சிந்தடி ) வரும்.

13. அலகிடுதல் எனபது யாது ?

            செய்யுளில் சீரை  பிரித்து, அசை பார்த்து , அசைக்கேற்ற வாய்ப்பாடு காணுதல்.

14. அசையின் வகைகள் யாவை?

            நேரசை , நிரையசை

15. ஓரசை சீர் வாய்ப்பாடுகள் யாவை?

            நேர்நாள்

            நிரைமலர்

            நேர்புகாசு

            நிரைபுபிறப்பு

16. ஈரசைச் சீர் வாய்ப்பாடுகள் யாவை?

            நேர்நேர் = தேமா

            நிரைநேர் = புளிமா

            நிரைநிரை = கருவிளம்

            நேர்நிரை = கூவிளம்.

17. மூவசைச் சீர் வாய்ப்பாடுகள் யாவை?

www.thamizhvithai.com

18 . பாவோசைகள் குறித்து புலவர் குழந்தை கூறுவது யாது?

செப்பலோசை

இருவர் உரையாடுவது போன்ற ஓசை

அகவலோசை

சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை

துள்ளலோசை

சீர் தோறுந் துள்ளி வரும் ஓசை. தாழ்ந்து உயர்ந்து வருவது.

தூங்கலோசை

சீர் தோறுந் துள்ளாது தூங்கி வரும் ஓசை. தாழ்ந்தே வருவது.

           

 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...