10TH - GRAMMER - Q& A - UNIT -9

  www.thamizvithai.com


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு உகந்த முறையில் படித்து நன்மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமாய் தமிழ்விதை வாழ்த்துகிறது. அதற்காக தமிழ்விதை வலைதளத்தில் செய்தி எதுவும் பதிவிடாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது,. இந்த வலைதளம் மூலம் யாரேனும் ஒருவர் பயனடைந்தாலும் எனக்கு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காண்பது, பத்தாம் வகுப்பு இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்களுக்கும் அதற்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை புத்தக வினாக்களாக இல்லாமல் புத்தகத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. மீத்திற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இவை உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதனை கற்று மாணவர்கள் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகள்.

பத்தாம் வகுப்பு ( புதிய பாடத் திட்டம்)

இலக்கண வினா – விடைகள்

இயல் – 9

அணி

 1. அணி என்றால் என்ன?

            செய்யுளுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவது அணிகள்.

 2. தற்குறிப்பேற்ற அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

அணி விளக்கம் :

இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

.கா:

                                    போருழ்ந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

                                    வாரல்என்பனபோல் மறித்துக்கை காட்ட

பாடலின் பொருள் :

கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பது போல் கை காட்டியது என்பது பொருள்.

            அணிப்பொருத்தம் :

கோவலனும் , கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதில் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால் இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக் கருதி அக்கொடிகள் கையை அசைத்து மதுரைக்குள் வர வேண்டா எனக் கூறுவது போல் புலவர் தன் குறிப்பை ஏற்றிக் கூறியுள்ளார்

 

 3. தீவக அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

அணி விளக்கம் :

 தீவகம் என்னும் சொல்லுக்கு  விளக்கு என்று பொருள். ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கு. அறை முழுவதும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குவது போல் செய்யுளில் ஓர் இடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருளை விளக்குவது தீவக அணி.

.கா:

சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து
திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து

ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து

திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,

மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து

( சேந்தன்சிவந்தன்; தெவ்பகைமை; சிலைவில்; மிசைமேலே; புள்பறவை )

பாடலின் பொருள்:
அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன; வலிமை உடைய வில் பொழிந்த அம்புகளும் சிவந்தன; குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.

அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன; வலிமை உடைய வில் பொழிந்த அம்புகளும் சிவந்தன; குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.

            அணிப்பொருத்தம் :

வேந்தன் கண் சேந்தன

தெவ்வேந்தர் தோள் சேந்தன

குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன

அம்பும் சேந்தன

மிசைஅனைத்தும் சேந்தன

புள் குலமும் சேந்தன

சேந்தன என்னும் சொல் பாடலின் பல இடங்களிலும் உள்ள சொற்கேளாடு சென்று சேர்ந்து நின்று பொருள் விளக்கம் தந்ததைக் காணலாம்.

 4. தீவக அணியின் வகைகள் யாவை?

            தீவக அணி மூன்று வகையாக வரும்.

1.       முதல் நிலைத் தீவகம்

2.     இடைநிலைத் தீவகம்

3.       கடைநிலைத் தீவகம்

 5. நிரல்நிறை அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

            அணி விளக்கம் :

                                    நிரல்வரிசை ; நிறைநிறுத்துதல்

                                    சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள்

 கொள்வது நிரல்நிறை அணி ஆகும்.

            .கா :

                                    அன்பும் அறனும் உடைத்தாயின் இவல்வாழ்க்கை

                                    பண்பும் பயனும் அது.              குறள் – 45

            பாடலின் பொருள் :

                                    இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால் அந்த வாழ்க்கையின் பண்பும்

                                    பயனும் அதுவே ஆகும்.

            அணிப் பொருத்தம்:

                                    இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக  நிறுத்தி , பண்பும் பயனும் என்ற

                                    சொற்களை முறைப்பட கூறபட்டுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.

 6. தன்மையணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக:-

            அணி விளக்கம் :

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும்.

            .கா:

                                    மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்

கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன்

கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்

உண்டளவே தோற்றான் உயிர்.

            பாடலின் பொருள் :

                                    உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றச் சிலம்போடு

                                    வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை நதி பாயும் கூடல்

                                    நகரத்து அரசனான பாண்டியன் தோற்றான். அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிர் நீத்தான்.

            அணிப் பொருத்தம் :

                                    கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம்

கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.

  7. தன்மையணியின் வகைகள் யாவை?

§  தன்மையணி நான்கு வகைப்படும்.

§  பொருள் தன்மை அணி

§  குணத்தன்மை அணி

§  சாதித் தன்மையணி

§  தொழிற் தன்மையணி



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...