10TH - NOTES OF LESSON - NOVEMBER - WEEK 3

 WWW.THAMIZHVITHAI.COM

நாள்                         :           15 -11-2021   முதல்  20 -11-2021                                      

வாரம்                     :         நவம்பர் -  மூன்றாம் வாரம்

வகுப்பு                  :            பத்தாம் வகுப்பு           

பாடம்                    :           தமிழ்

பாடத்தலைப்பு    :           1. கோபல்லபுரத்து மக்கள்

                                           2. தொகா நிலைத் தொடர்கள்

                                            3. திருக்குறள்  

 கருபொருள்                            :

Ø  சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறைகளை வட்டார இலக்கியங்களின் நடையில் புரிந்து படித்தல்

Ø  தொகா நிலைத் தொடர்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்

Ø  மனித வாழ்வின் பண்பாட்டு கூறுகள் பற்றி அறிதல்

 

உட்பொருள்                           :

Ø  கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் பண்பினை அறிதல்

Ø  உருபுகள் மறையாமல் வெளிப்படையாக வரும் தொடர்களின் வகைகள் அறிதல்.

Ø  திருக்குறளின் பெருமைகள் மற்றும் சிறப்புகள் பற்றி அறிதல்.

Ø  வாழ்வியலுக்குரிய பண்பாட்டுக் கூறுகள்

அறிமுகம்                               :

Ø  கிராமத்து கதைகள் கூறி அறிமுகம் செய்தல்

Ø  மாணவர்கள் அன்றாடம் செய்யும் செயலைகளை கூற செய்து அதனை தொடராக எழுதி தொடரை அறிமுகம் செய்தல்.

Ø  திருக்குறள் சிறப்புகளை கூறல்,

கற்றல் விளைவுகள்                 :

Ø  இருப்பதை பகிர்ந்து உண்ணும் பண்பினை வளர்த்தல்.

Ø  தொகா நிலைத் தொடர்களின் வகைகள் அறிதல்.

Ø  மனித வாழ்வில் திருக்குறள் கூறும் பண்பாட்டு நெறிகளைப் பின்பற்றுதல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  வட்டார வழக்கில் காணப்படும் விருந்தோம்பலையும்,வட்டார வழக்கு பேச்சு முறைகளையும் காணல்

Ø  கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் குணங்களை அறிதல்

Ø  தொகா நிலைத் தொடர்களில் உள்ள ஒன்பது வகைகள் அறிதல்.

Ø    எழுவாய்த் தொடர்

Ø    விளித் தொடர்

Ø    வினைமுற்றுத் தொடர்

Ø    பெயரெச்சத் தொடர்

Ø    வினையெச்சத் தொடர்

Ø    வேற்றுமைத் தொடர்

Ø    இடைச்சொல் தொடர்

Ø    உரிச்சொல் தொடர்

Ø    அடுக்குத் தொடர்

Ø  திருக்குறளின் சிறப்புகள் அறிதல்.

Ø  ஒழுக்கமுடைமை,பெரியாரைத் துணைகோடல், கண்ணோட்டம்,கொடுங்கோன்மை,ஆள்வினை உடைமை, நன்றி இல் செல்வம்

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  கிராமத்து கதைகளை அந்த மண் மணம் மாறாமல் வாசித்தல்

Ø  வட்டார வழக்கில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு பொருள் அறிதல்

Ø  தொகா நிலைத் தொடர்களை சொல்லட்டைகளைப் பயன்படுத்தி தொடர் அமைத்து கூறல்.

Ø  அன்றாட செயல்பாடுகளை தொடர்களாக அமைத்து தொகா நிலைத் தொடர்களை தொடர்புப்படுத்தி கற்றல்.

Ø  திருக்குறளை சீர் பிரித்து படித்துக் காட்டல்

Ø  மனப்பாடப்பகுதியை இனிய இராகத்துடன் பாடுதல்.

Ø  திருக்குறளின் கருத்துகளை அன்றாட வாழ்வியல் நெறிமுறைகளுடன் ஒப்பிடல்

கருத்துரு வரைபடம்                :              கோபல்லபுரத்து மக்கள்

https://tamilrk-seed.blogspot.com


                                                                    தொகா நிலைத் தொடர்கள்

https://tamilrk-seed.blogspot.com

                                                                    திருக்குறள்

https://tamilrk-seed.blogspot.com


மாணவர் செயல்பாடு               :             

Ø  வாழ்வியல் தொடர்களுடன் தொகா நிலைத் தொடர்களுடன் ஒப்பிடல்.

Ø  கிராமங்களில் பின்பற்றப்படும் விருந்தோம்பல் பண்பினை போற்றுதல்.

Ø  விருந்தோம்பல் பண்பினைத் தம் வாழ்வியலில் பின்பற்றுதல்.

Ø  மாணவர்கள் திருக்குறளை சீர் பிரித்து படித்தல்

Ø  குறட்பாக்களின் பொருள் அறிதல்

Ø  திருக்குறளின் கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்.

வலுவூட்டல்                             :

Ø  பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்                      :

Ø   மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை படித்தல்.

Ø  எளிய சொற்கள் கொண்டு தொடர் உருவாக்குதல்

Ø  குறட்பாக்களை சீர் பிரித்து வாசித்தல்

Ø  மனப்பாடக் குறளை மனனம் செய்தல்.

மதிப்பீடு                                 :

Ø  உருபு மறையாமல் வரும் தொடர் _____________

Ø  கோபல்ல புரத்து மக்கள் என்ற கதையினை எழுதியவர் ___________

Ø  திருக்குறளை இயற்றியவர் ____________

Ø  ஊரின் நடுவில் உள்ள நச்சுமரம் எதற்கு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது?

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@--------------------

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...