9TH - NOTES OF LESSON - NOVEMBER - 3RDWEEK

WWW.THAMIZHVITHAI.COM

நாள்                 :           15-11-2021 முதல்  20-11-2021             

மாதம்                           நவம்பர்            

வாரம்               :          மூன்றாம் வாரம்                                  

வகுப்பு              :            ஒன்பதாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. பெரிய புராணம்

                                            2. புறநானூறு

கருபொருள்                            :

Ø  வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்

Ø  இயற்கை அழகை போற்றும் கவிதைகளை படைத்தல்

Ø  நீரின் இன்றியாமையாமையை உணர்ந்து நீர் நிலைகளைப் பாதுகாத்தல்

 

உட்பொருள்                           :

Ø  திரு நாட்டின் வளச்சிறப்பை உணர்தல்

Ø  பெரிய புராணத்தின் சிறப்பை உணர்தல்

Ø  செய்யுளின் நயங்களை உணர்தல்

Ø  நீரின் இன்றியமையாமையை புறநானூறு வழியாக அறிதல்

Ø  புறநானூற்றின் நூற் குறிப்பு அறிதல்.

Ø  செய்யுளின் நயங்களை உணர்தல்

அறிமுகம்                               :

Ø  நீரின் இன்றியாமையை உணர்த்தும் நிகழ்வுகளை கூறல்.

Ø  மழைக்காலங்களில் நீர் எவ்வாறு தனது ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்பதனை கடந்த வாரம் தமிழகத்தில் வந்த புயலைக் கூறுதல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,வரைபடத்தாள், ஒலிப்பெருக்கி,ஒளிப்பட வீழ்த்தி

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  பெரிய புராணம் மற்றும் புறநானூறு – இலக்கியத்தின் நூற் குறிப்பு

Ø  பாடலில் உள்ள நயங்கள் அறிதல் ( எதுகை, மோனை,இயைபு, பொருள் )

Ø  காவிரி ஆறு பாயும் பாதை மற்றும் திருநாட்டின் சிறப்பை பாடல் வழியாக உணர்தல்.

Ø  பெரிய புராண மனப்பாடப் பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  கடினச் சொற்களுக்கு அகராதி வழியாக பொருள் காணுதல்

Ø  நீரின் இன்றியமையாமையை பாடல் வழியாக உணர்தல்

Ø  நீர் நிலைகளைப் போற்றி பாதுகாத்தல்

Ø  புறநானூற்றில் இப்பாடல் அமைந்துள்ள திணை மற்றும் துறைகளை அறிதல்.

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø  செய்யுளினை சீர் பிரித்து படித்தல்

Ø  செய்யுளின் பொருளை விளக்குதல்.

Ø  செய்யுளின் கருத்துகளை அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் ஒப்பிடல்

Ø   செய்யுளில் இடம் பெற்றுள்ள நயங்களை விளக்குதல்

Ø  மனப்பாடப் பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  பாடல் கருத்துகளை அன்றாட வாழ்வியல் கூறுகளோடு தொடர்புப்படுத்தி கற்பித்தல்

கருத்துரு வரைபடம்                :        பெரிய புராணம்

https://tamilrk-seed.blogspot.com

    புறநானூறு

https://tamilrk-seed.blogspot.com


மாணவர் செயல்பாடு               :             

Ø  பெரிய புராணம், புறநானூறு – நூற் குறிப்பு பிழையின்றி வாசித்தல்

Ø  பெரிய புராணம், புறநானூறு – பாடலினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  பெரிய புராணம், புறநானூறு – மனப்பாடப்பாடலை மனனம் செய்தல்

Ø  பாடலின் பொருளை வாழ்வியல் நடைமுறைகளோடு தொடர்புபடுத்துதல்.

Ø  பாடலில் காணப்படும் நயங்களை உணர்தல்.

Ø  செய்யுளில் உள்ள இலக்கணக் கூறுகளைக் காணுதல்.

Ø  இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகளை அறிதல்.

வலுவூட்டல்                             :

Ø  பாடலை மீண்டும் இனிய இராகத்தில் பாடுதல், தொடர்ந்து மாணவர்களையும் பின் தொடர்ந்து பாட வைத்து வலுவூட்டல்

Ø  பாடல் கருத்துகளை  மீண்டும் கூறி வலுவூட்டல்

குறைதீர் கற்றல்                      :

Ø   மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.

Ø  மனப்பாடப்பாடலை மீண்டும் இனிய இராகத்தில் பாடுதல்

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  பாடல் வரிகளை இரண்டு இரண்டு அடிகளாக படித்தல்

Ø  நயங்களை எடுத்தெழுதுதல்

மதிப்பீடு                                 :

Ø  காடலெல்லாம் என்ற செய்யுள் அடிகளில் இடம் பெறும் நயங்கள் யாவை?

Ø  பாய்வன – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

Ø  சேக்கிழார் காலம் ______________

Ø  பொருத்துக:-

·        நிறுத்தல்                -             வினையாலணையும் பெயர்

·        நீரும் நிலமும்          -             தொழிற் பெயர்

·        கொடுத்தோர்          -             வினைத்தொகை     

·        அடுப்போர்              -             உம்மைத் தொகை

Ø  முதுமொழிக்காஞ்சித் துறை என்பது யாது?

 

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@-----------------------

நன்றி, வணக்கம்தமிழ்விதை



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...