10TH - SLOW LEARNERS - REDUSED SYLLABUS - UNIT 8

 

WWW.THAMIZHVITHAI.COM
slow learners - guide

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்பு – தமிழ்

இயல் – 8

பெருவழி

) பலவுள் தெரிக:-

1. மேன்மை தரும் அறம் என்பது______________________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது   

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது          

இ) புகழ் கருதி அறம் செய்வது

ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.

அ) உதியன்;சேரலாதன்          ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்           

இ) பேகன்;கிள்ளிவளவன்       ஈ) நெடுஞ்செழியன்;திருமிடிக்காரி

3. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்___________

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது        ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்   ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

4. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்________________

அ) அகவற்பா                      ஆ) வெண்பா                         இ) வஞ்சிப்பா         

ஈ) கலிப்பா

) குறு வினா

1. ‘ கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க!

  உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது

) அடியெதுகையை எடுத்தெழுதுக..

) இலக்கணக் குறிப்பு எழுதுக- கொள்க,குரைக்க

அடிஎதுகை: கொள்வோர்ள்வாய்

இலக்கணக் குறிப்பு: கொள்க,குரைக்கவியங்கோள் வினைமுற்று

2. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

Ø  வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள் கொண்டது குறள் வெண்பா.

Ø  .கா: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

               மெய்ப்பொருள் காண்ப தறிவு

3. குறிப்பு வரைக:- அவையம்

Ø  அறம் கூறும் மன்றங்கள்

Ø  துலாக்கோல் போல் நடுநிலையானது

Ø  மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.

4. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

               தூங்கலோசை வஞ்சிப்பாவிற்கும்,துள்ளலோசை கலிப்பாவுக்கும் உரியது.

 

) சிறு வினா.

1. சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

Ø  வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

Ø  நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பொருந்தும்

2. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

Ø  அகவல் ஓசை பெற்று வரும்.

Ø  ஈரசைச்சீர் குறைவாக காய்ச்சீர் மிகுதியாக வரும்

Ø  ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.

Ø  வெண்டளை,கலித்தளை விரவி வரும்.

Ø  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும்

Ø  ஏகாரத்தில் முடிவது சிறப்பு

3. ‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம்என்ற தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. ( குறிப்புசுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )

Ø  சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அதை பின்பற்றுதல் வேண்டும்.

Ø  பொது போக்குவரத்து பயன்பாடு

Ø  மரம் வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

Ø  ஒவ்வொருவர் உள்ளத்திலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய மாற்றம் வேண்டும்.

நெடுவினா

1. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

சேலம்

03-03-2021

அன்புள்ள மாமாவுக்கு,

               நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் எங்கள் பள்ளித் திடலில் பை ஒன்று கிடந்தது. அதனை திறந்த போது அதில நிறைய பணம் இருந்தது. உடனடியாக நான் தலைமை ஆசிரியரிடம் விபரம் கூறி ஒப்படைத்தேன்.மறுநாள் காலை இறைவணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரி இருவரும் பாராட்டி ஒரு நற்சான்றிதழையும் வழங்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரமாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும்.

                                             நன்றி,வணக்கம்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

பெறுதல்

               திரு.இரா.இளங்கோ,

               100,பாரதி தெரு,

               நாமக்கல்.

 

2. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

               கவிஞன் யானோர் காலக் கணிதம்

               கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

               புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

               பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

               இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

               இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

               ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

               அவனும் யானுமே அறிந்தவை;அறிக!

-கண்ணதாசன்.

மோனை நயம்:

               செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.

               விஞன்   ருப்படு

எதுகை நயம்:

               செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.

               ருப்படு   ருப்பட

சந்த நயம்:

               இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.

இயைபு நயம்:

               இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல் இயைபு நயம்.

               தெய்வம்                  செல்வம்

முரண் நயம்:

               முரண்பாடாக அமைவது முரண்.

                              ஆக்கல் × அழித்தல்

 

மொழியை ஆள்வோம்

) மொழிபெயர்க்க:-

               Once upon a time there were two beggars in Rome. The  first begger used to cry  in the streets of the city,”He is helped whom God helps”.The Second begger used to cry,” He is helped who the king helps”. This was repeated by them everyday. The emperor of Rome heard it so often that he decided to help the begger who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the begger felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him,” What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “ I sold it to my friend,because it was heavy and did not seem well baked “ Then the Emperor said, “ Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out his palace.

விடை:

               ரோம் நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தார்கள்.அதில் ஒருவன் கடவுள் என்னை காப்பார் எனக் கூறிக்கொண்டே இருந்தான். இன்னொருவன் அரசன் தன்னை காப்பாற்றுவான் எனக் கூறிக்கொண்டே இருப்பான்.

              

) மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-

1. மனக்கோட்டை -  முதலமைச்சர் ஆகிவிடலாம் என மனக்கோட்டைக் கட்டாதே

2. அள்ளி இறைத்தல் – கர்ணன் எளியவர்களுக்கு அள்ளி இறைத்து கொடை தர்மம் செய்தான்.

3. கண்ணும் கருத்தும் – தமிழ்ச்செல்வன் கண்ணும் கருத்துமாய் படித்து போட்டித் தேர்வில் வென்றான்

4. ஆறப்போடுதல் – கோபத்தை ஆறப்போடுதல் வேண்டும்

 

) பின் வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக;-

தம்பீ? எங்க நிக்கிறே?”

நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”

அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.... நா வெரசா வந்துருவேன்

அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே ! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு !”

அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”

ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”

இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது.! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்.

விடை:

“ தம்பி? எங்கே நிற்கிறாய்?

“ நீங்கள் கூறிய இடத்தில் தான் அண்ணே! எதிர்ப்புறம் உள்ள ஒரு தேநீர் கடையில் இருக்கிறது.

“ அங்கே தேநீர் அருந்திவிட்டு, செய்தித்தாள் படிச்சிக்கிட்டு இரு. நான் விரைவாக வந்துடுவேன்”

“ அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் அண்ணா ! அவனைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது”

“ அவன் பாட்டியுடன் வெளியூர் போயிருக்கான்.உங்க ஊருக்கு அவனைக் கூட்டிக்கிட்டு வருகிறேன்”

“ சிறு வயதில் பார்த்தது அண்ணா! அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்”

“ இப்போது உயரமாக வளார்ந்துட்டான்! உனக்கு அடையாளமே தெரியாது! எங்களுடன் வருவான் பாரு!

“ சரி, கைப்பேசியை வை. நான் கிளம்பிவிட்டேன்”.

) நயம் பாராட்டுக:-

               கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

               குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

               ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

               உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

               மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

               மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே

               ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

               ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

-    வள்ளலார்.

திரண்ட கருத்து:

               கோடையில் இளைப்பாறா உதவும் மரமாகவும்,அதன் நிழலாகவும்,கனியாகவும் இருப்பவனே! ஓடையில் ஓடும் சுவைதரும் நீராகவும், மலர்ந்த மணமலராகவும்,மெல்லிய பூங்காற்றாகவும் திகழ்பவனே! விளையாட்டுப் பருவத்தில் என்னை ஆட்கொண்ட இறைவா! பலர் கூடும் பொது இடத்தில் நடனம் ஆடுகின்ற இறைவா! என் பாமாலையை ஏற்று அருள் புரிவாயாக என வள்ளலார் இறைவனை வணங்குகிறார்.

மையக் கருத்து :

               எல்லாமுமாகத் திகழும் இறைவனை வாழ்த்தி வணங்குவதே இப்பாடலின் மையக் கருத்து.

சொல்  நயம் :

               குளிர்தருவே,தருநிழலே,சுகந்த மணமலரே ,மெல்லிய பூங்காற்றே ஆகிய அழகான சொற்கள் பாடலுக்கு நயம் கூட்டுகின்றன.

பொருள் நயம் :

               “ சுகந்த மணமலரே. மென் காற்றில் விளைசுகமே, சுகத்தில் உறும் பயனே, ஆடையிலே எனை மணந்த மணவாளா “ ஆகிய சொற்கள் ஆழமான பொருளை உடையன.

சந்த நயம் :

               இப்பாடல் பாடுவதற்கு ஏற்ற சந்த நயத்துடன் அமையப் பெற்றுள்ளது.

மோனை நயம் :

               முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

               கோடை                  -             கொள்ளும் வகை

               மேடையிலே                        மென்காற்றிலே

எதுகை நயம் :

               முதலெழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.

               கோடையிலே          -             டையிலே

               ந்த                    -             சுந்த

முரண் நயம் :

               முரண்பட்ட சொற்களால் அமைவது முரண் நயம்.

               கோடையிலே          X             குளிர்தருவே

இயையு நயம் :

               பாடலில் இறுதி எழுத்தோ. அசையோ, சீரோ, இயைந்து வருவது இயைபு நயம்.

               கனியே                   -             மலரே

காற்றே                   -             பயனே

அணிநயம் :

               இபாடலில் இறைவனை மரமாகவும், நிழலாகவும்,கனியாகவும், தண்ணீராகவும், மணமலராகவும், பூங்காற்றாகவும்,சுகமாகவும் உருவகம் செய்து பாடியுள்ளமையால், இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

பா வகை :

               எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா பா வகையைச் சார்ந்துள்ளது.

இயல் -8

மொழியோடு விளையாடு

) கண்டுபிடித்து எழுதுக:-

ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,ஆறு,ஏழு,எட்டு,பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக.....

ஒன்று

கொன்றன்ன இன்னா செய்யினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்

இரண்டு

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்காது எனின்

மூன்று

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின்

நாமம் கெடக்கெடும் நோய்

நான்கு

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்காறு இயன்றது அறம்

ஐந்து

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால் ஊன்றிய தூண்

ஆறு

படைக்குடி கூழ்அமைச்சு நட்பரன் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

ஏழு

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்

எட்டு

கோயில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

பத்து

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்

 

) சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக;-          

கானடை

கான் அடை – காட்டைச் சேர்

கான் நடை – காட்டுக்கு நடத்தல்

கால் நடை – காலால் நடத்தல்

வருந்தாமரை

வரும் + தாமரை – வருகின்ற தாமரை மலர்

வரும் + தா + மரை – தாவுகின்ற மான் வருகிறது

வருந்தா + மரை – துன்புறாத மான்

பிண்ணாக்கு

பிள் + நாக்கு – பிளவுப்பட்ட நாக்கு

பிண்ணாக்கு – கடலை,எள் அரைக்கும் போது கிடைப்பது

பலகையொலி

பல + கையொலி – பல கைகளால் சேர்ந்த ஒலி

பலகை + ஒலி – பலகையால் ஏற்படும் ஒலி

 PDF - FORMAT

( WILL BE UPDATED SOON )

தயாரிப்பு:-

வெ.ராமகிருஷ்ணன்,

பட்டதாரி ஆசிரியர்.

இது போன்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்

 பயன்படக்கூடிய படைப்புகளை பெற பின் வரும் தளங்களை பின் தொடரவும்….

www.thamizhvithai.com

https://tamilrk-seed.blogspot.com

கல்வித் தொடர்பான காணொளிகளைக் காண ( subscribe )

https://www.youtube.com/c/தமிழ்விதை

 

 

 

 

 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...