10TH -SLOW LEARNERS - REDUSED SYLLABUS - UNIT -9

 

WWW.THAMIZHVITHAI.COM
slow learners - guide

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்பு – தமிழ்

இயல் – 9

 அன்பின் மொழி

) பலவுள் தெரிக:-

1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது______________________

) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்         ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்    ) அறிவியல் முன்னேற்றம்                                         

) வெளிநாட்டு முதலீடுகள்

2. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று__________________,________________வேண்டினார்.

) கருணையன் எலிசபெத்துக்காக ) எலிசபெத் தமக்காக

) கருணையன் பூக்களுக்காக  ) எலிசபெத் பூமிக்காக

3. வாய்மையே மழைநீராகஇத்தொடரில் வெளிப்படும் அணி___________

) உவமை              ) தற்குறிப்பேற்றம்  ) உருவகம்       ) தீவகம்

4. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது________________

) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.

) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்                  

) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

) குறுவினா

1. தீவக அணிகளின் வகைகள் யாவை?

Ø  முதல் நிலை தீவகம்

Ø  இடை நிலை தீவகம்

Ø  கடை நிலை தீவகம்

2. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டுஇத்தொடரை இரு தொடர்களாக்குக.

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு. அதற்குரிய காரணமும் உண்டு.

3. “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?

தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து.

4. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

  பண்பும் பயனும் அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

அணி: நிரல் நிறை அணி. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.

.கா: அன்புக்கு அறன், பண்புக்கு பயன்

 

) சிறு வினா.

1. ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக மித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத்தர்க்கத்திற்கு அப்பால்கதை மாந்தர் வாயிலாக விளக்குக.

Ø  பார்வையற்றவருக்கு இரண்டனா இடுதல்.

Ø  பார்வையற்றவர்  போகிற வழியெல்லாம் புண்ணியம் என வாழ்த்துக் கூறல்.

Ø  தர்மம் செய்ததால் இரயில் விபத்திலிருந்து தப்பித்தல்.

2. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

Ø  உயிர் பிழைக்கும் வழி

Ø  உடலின் தன்மை

Ø  உணவை தேடும் வழி

Ø  காட்டில் செல்லும் வழி

3. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல்.

.கா:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்

..................................................................................

................... கூவினவே கோழிக் குலம்.

விளக்கம்:

அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

நெடுவினா

இயல் – 9

1. கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

Ø  பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக.

Ø  கருணையன் அன்னை உடல் மீது மலரையும்,கண்ணீரையும் பொலிந்தான்

Ø  கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர்ப் போல உள்ளது.

Ø  அம்பினால் உண்டான வலிப் போல் உள்ளது.

Ø  கருணையனை தவிக்க விட்டுச் சென்றார்.

Ø  பசிக்கான வழித் தெரியாது.

Ø  இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது.

Ø   

2. ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

வாசிப்போம்                                                       நேசிப்போம்

இதழ் வெளியீடு

இதழ்                   :              ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

எழுத்தாளர்            :              ஜெயகாந்தன் ( சிறுகதை மன்னன் )

               இனி வாராவாரம் ஆரவாரம். வாரந்தோறும் ஜெயகாந்தன் அவர்களின் கதைகள் நமது இதழின் நடுப்பக்கத்தில் வெளிவரும்.

இப்போது பரபரப்பான விற்பனையில்.....

இது தமிழ்விதை வார இதழ் வெளியீடு.

நன்றி

இயல் – 9

மொழியை ஆள்வோம்

) மொழிபெயர்க்க:-

1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே கல்வி – ஆல்பிரட் ஐன்ஸ்டீன்

2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

நாளையே இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி

3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

நம் வாழ்வில் மிகவும் இருண்ட காலத்தில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட வேண்டும் - அரிஸ்டாட்டில்

4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

வெற்றி என்பது முடிவல்ல தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது – வின்ஸ்டன் சர்ச்சில்

 

) உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக;-

தாமரை இலை நீர்போல

என் நண்பன் தாமரை இலை நீர் போல பட்டும் படாமலும் பழகுவான்

 

மழைமுகம் காணாப் பயிர்போல               

 

தாயை இழந்த கருணையன் மழைமுகம் காணாப் பயிர் போல வாடினான்

 

கண்ணினைக் காக்கும் இமைபோல

தாய் தன் மகளை கண்ணினைக் காக்கும் இமைபோல பாதுகாத்து வந்தாள்.

சிலை மேல் எழுத்து போல

இளமையில் கற்ற கல்வி சிலைமேல் எழுத்துப் போல நிலையானது.

 

இ ) பொருத்தமான நிறுத்தற்க் குறியிடுக:-

சேர்ரகளின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

விடை :    

சேர்ரகளின் பட்டப் பெயர்களில் ‘ கொல்லி வெற்பன் ‘, ‘மலையமான்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், ‘ கொல்லி வெற்பன் ‘ எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் ‘ மலையமான் ‘ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன,

ஈ) பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக;-

               கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்

               கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை

               காசிம்புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை

               செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ

கம்பன்

உமறுப்புலவர்

காசிம் புலவர்

குணங்குடியார்

சேகனாப் புலவர்

செய்குதம்பி பாவலர்

 

 

1 கா

லை

 

2 தே

மா

 

ள்

 

 

ணி

ர்

 

தி

 

டு

 

3கு

கா

ரை

த்

நே

4 மூ

ட்

கு

 

று

பா

கீ

ர்

ங்

5 எ

க்

ழ்

ந்

ம்

ம்

ங்

கீ

ப்

கி

7 தி

ரு

மி

தொ

6 தே

 

8செ

க்

பா

ல்

ங்

9 தி

கை

 

10

 

ய்

 

11 க

லி

த்

தொ

12 கை

 

 

13மெ

 

ள்

 

ளை

த்

க்

14க

ர்

யா

வை

15ஔ

ள்

னை

கி

ம்

ரு

16 உ

 

 

17 பி

18 வி

ளை

 மொழியோடு விளையாடு

விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க 

www.thamizhvithai.com

சேலம் மாவட்டம், போக்குவரத்துக் காவல் துறையினரால் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெறவிருக்கிறது. “ சாலை பாதுகாப்பு “ என்பது நம்முடைய வாழ்க்கை முறை என்பதனை உணர வேண்டும். போக்குவரத்துக்கான அடையாளக் குறியீயுகளைப் பற்றியும் வாகனங்களை வேகமாக ஓட்டுவதனால் ஏற்படும் விபத்துகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்..

கீழ்க்காணும் நாட்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக:-

ஞாயிறு

திங்கள்

செவ்வாய்

புதன்

வியாழன்

வெள்ளி

சனி

-

-

-

0

௧௧

௧௨

௧௩

௧௪

௧௫

௧௬

௧௭

௧௮

௧௯

0

௨௧

௨௨

௨௩

௨௪

௨௫

௨௬

௨௭

௨௮

௨௯

0

௩௧

-

PDF - FORMAT

( WILL BE UPDATED SOON ) 

தயாரிப்பு:-

வெ.ராமகிருஷ்ணன்,

பட்டதாரி ஆசிரியர்.

இது போன்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்

 பயன்படக்கூடிய படைப்புகளை பெற பின் வரும் தளங்களை பின் தொடரவும்….

www.thamizhvithai.com

https://tamilrk-seed.blogspot.com

கல்வித் தொடர்பான காணொளிகளைக் காண ( subscribe )

https://www.youtube.com/c/தமிழ்விதை

 

 

 

 

 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...