நாள் : 08-11-2021 முதல் 13 -11-2021
வாரம் : நவம்பர் - இரண்டாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : அடிப்படை மொழித் திறன்கள்
பக்க எண் : 07 - 11
நோக்கம் :
Ø அலுவலக கடிதம் எழுதும் நடைமுறைகள் அறிதல்
Ø புதிர்களுக்கு விடை காணுதல்
Ø பிறமொழிகளுக்கு இணையான தமிழ்ச்சொற்கள், கலைச்சொற்கள் அறிதல்
Ø நிறுத்தற் குறியீடு அறிதல்
Ø மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலித்தல்
கற்றல் விளைவுகள்:
Ø பல்வேறு பாடப்பொருள்களைப் பல்வேறு நோக்கங்களுக்காக எழுதும் போது பொருத்தமான சொற்கள், தொடர்கள், சொற்றொடர், மரபுத்தொடர்,நிறுத்தற்குறிகள் மற்றும் பிற இலக்கணக் கூறுகளைப் பொருத்தமாகப் பயன்படுத்துதல்
Ø விடுகதைகள் மற்றும் புதிர்களுக்கு விடை காண முயலுதல்
Ø அகராதியைப் பயன்படுத்தி பொருள் அறிதல்
Ø பல்வேறு நோக்கங்களுடன் பல்வேறு தலைப்புகளில் சரியான நிறுத்தற்குறிகளுடன் எழுதுதல்.
Ø பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப் பகுதிகளை உரிய ஒலிப்புமுறை,குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு படித்தல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø கடித வகைகள் அறிதல்.
Ø அலுவலகக் கடிதத்தில் இடம் பெற வேண்டிய கூறுகளைக் காணல்.
Ø மாதிரி அலுவலகக் கடிதம் கொண்டு கடித அமைப்பு முறையைக் கூறல்
Ø ஒரு பொருளை மறை பொருளாக விவரித்துக் கொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை எனப்படும். மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் இந்த விடுகதையினை குழுவாகவோ, தனிநபர் செயல்பாடாகவோ செய்தல்
Ø பிறமொழிச்சொற்கள் தமிழ்மொழியில் பேச்சிலும் எழுத்திலும் கலந்து பயன்படுத்துவதை தவிர்த்து நல்ல தமிழில் அதனை எழுத முயற்சி செய்தல்
- டிரஸ்ட் - அறக்கட்டளை
- லைப்ரரி - நூலகம்
Ø நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிந்து அதன்படி முறையாக எழுதுதல்.
காற்புள்ளி ; அரைப்புள்ளி ; முக்காற் புள்ளி ; முற்றுப்புள்ளி ; வினாக்குறி ; வியப்புக்குறி ; மேற்கோள் குறி ; இரட்டை மேற்கோள் குறி
Ø மயங்கொலிச்சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே ஒலிப்பினைக் கொண்டவை.
ல | முதல் லகரம் |
ழ | சிறப்பு ழகரம் |
ள | பொது ளகரம் |
ர | இடையின ரகரம் |
ற | வல்லின றகரம் |
ண | டண்ணகரம் |
ந | தந்நகரம் |
ன | றன்னகரம் |
வலுவூட்டல்:
Ø கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
மதிப்பீடு:
Ø மதிப்பீடு செயல்பாடு : கொடுக்கப்பட்ட மாதிரி கடித்ததில் விடுபட்ட இடங்களை நிறைவு செய்க
Ø இரண்டு வீட்டிற்கு ஒரு முட்டம் அது என்ன?
Ø தமிழ்ச்சொல் அறிக: காலண்டர் ; டைமண்ட் ; கோல்ட் ; பிஸ்கட்
Ø இரட்டை மேற்கோள் குறி எப்போது பயன்படுத்த வேண்டும்?
Ø தொடருக்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடு:
- பிள்ளைச்செல்வம் _____________________ இன்பம் ( கொல்லை/கொள்ளை)
- பழகப் பழகப் _________________ புளிக்கும் ( பாலும்/ பாளும் )
- நல்ல ______________________ மெல்லத் தவழும் ( பில்லை / பிள்ளை )
தொடர்பணி:
Ø பள்ளி நூலகத்திற்கு தமிழ் அகராதி வேண்டி தமிழ்விதை பதிப்பகத்திற்கு விண்ணப்பம் எழுதுக.
Ø 10 விடுகதைகள் மற்றும் விடைகள் மாணவர்கள் உருவாக்கி எழுதி வருக.
Ø உமது புத்தகத்தில் உள்ள கலைச்சொற்களை எழுதி வருக.
Ø நிறுத்தற் குறியீடுகளைப் பயன்படுத்தி பத்தி / தொடர்கள் எழுதி வருக
Ø நா பிறழ் பயிற்சிக்கான தொடர்கள் கொடுத்து மாணவர்கள் பயிற்சி செய்து வருதல்
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது