7TH - REFRESH COURSE - NOTES OF LESSON - NOVEMBER - WEEK 2

WWW,THAMIZHVITHAI.COM


நாள்                         :           08-11-2021   முதல்  13 -11-2021                                      

வாரம்                     :         நவம்பர் -  இரண்டாம் வாரம்

வகுப்பு                  :            ஏழாம் வகுப்பு 

                                        ( புத்தாக்கப் பயிற்சி)                             

பாடம்                    :           தமிழ்

பாடத்தலைப்பு    :           அடிப்படை மொழித் திறன்கள்

பக்க எண்            :              07 -  11

நோக்கம்  :

Ø  அலுவலக கடிதம் எழுதும் நடைமுறைகள் அறிதல்

Ø புதிர்களுக்கு விடை காணுதல்

Ø  பிறமொழிகளுக்கு இணையான தமிழ்ச்சொற்கள், கலைச்சொற்கள் அறிதல்

Ø  நிறுத்தற் குறியீடு அறிதல்

Ø  மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலித்தல்

கற்றல் விளைவுகள்:

Ø  பல்வேறு பாடப்பொருள்களைப் பல்வேறு நோக்கங்களுக்காக எழுதும் போது பொருத்தமான சொற்கள், தொடர்கள், சொற்றொடர், மரபுத்தொடர்,நிறுத்தற்குறிகள் மற்றும் பிற இலக்கணக் கூறுகளைப் பொருத்தமாகப் பயன்படுத்துதல்

Ø  விடுகதைகள் மற்றும் புதிர்களுக்கு விடை காண முயலுதல்

Ø  அகராதியைப் பயன்படுத்தி பொருள் அறிதல்

Ø  பல்வேறு நோக்கங்களுடன் பல்வேறு தலைப்புகளில் சரியான நிறுத்தற்குறிகளுடன் எழுதுதல்.

Ø  பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப் பகுதிகளை உரிய ஒலிப்புமுறை,குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு படித்தல்.

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

Ø  கடித வகைகள் அறிதல்.

Ø  அலுவலகக் கடிதத்தில் இடம் பெற வேண்டிய கூறுகளைக் காணல்.

Ø  மாதிரி அலுவலகக் கடிதம் கொண்டு கடித அமைப்பு முறையைக் கூறல்  

Ø  ஒரு பொருளை மறை பொருளாக விவரித்துக் கொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை எனப்படும். மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் இந்த விடுகதையினை குழுவாகவோ, தனிநபர் செயல்பாடாகவோ செய்தல்

Ø  பிறமொழிச்சொற்கள் தமிழ்மொழியில் பேச்சிலும் எழுத்திலும் கலந்து பயன்படுத்துவதை தவிர்த்து நல்ல தமிழில் அதனை எழுத முயற்சி செய்தல்

  •            டிரஸ்ட்    -  அறக்கட்டளை
  •            லைப்ரரி      -  நூலகம்

Ø  நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிந்து அதன்படி முறையாக எழுதுதல்.

                    காற்புள்ளி ; அரைப்புள்ளி ; முக்காற் புள்ளி ; முற்றுப்புள்ளி ; வினாக்குறி ; வியப்புக்குறி ; மேற்கோள் குறி ; இரட்டை மேற்கோள் குறி

Ø  மயங்கொலிச்சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே ஒலிப்பினைக் கொண்டவை.

 

முதல் லகரம்

சிறப்பு ழகரம்

பொது ளகரம்

இடையின ரகரம்

வல்லின றகரம்

டண்ணகரம்

தந்நகரம்

றன்னகரம்

வலுவூட்டல்:

Ø  கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி  பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

மதிப்பீடு:

Ø  மதிப்பீடு செயல்பாடு : கொடுக்கப்பட்ட மாதிரி கடித்ததில் விடுபட்ட இடங்களை நிறைவு செய்க

Ø  இரண்டு வீட்டிற்கு ஒரு முட்டம் அது என்ன?

Ø  தமிழ்ச்சொல் அறிக: காலண்டர் ; டைமண்ட் ; கோல்ட் ; பிஸ்கட்

Ø  இரட்டை மேற்கோள் குறி எப்போது பயன்படுத்த வேண்டும்?

Ø  தொடருக்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடு:

  •         பிள்ளைச்செல்வம் _____________________ இன்பம் ( கொல்லை/கொள்ளை)
  •         பழகப் பழகப் _________________ புளிக்கும் ( பாலும்/ பாளும் )
  •         நல்ல ______________________ மெல்லத் தவழும் ( பில்லை / பிள்ளை )

தொடர்பணி:

Ø  பள்ளி நூலகத்திற்கு தமிழ் அகராதி வேண்டி தமிழ்விதை பதிப்பகத்திற்கு விண்ணப்பம் எழுதுக.

Ø  10 விடுகதைகள் மற்றும் விடைகள் மாணவர்கள் உருவாக்கி எழுதி வருக.

Ø  உமது புத்தகத்தில் உள்ள கலைச்சொற்களை எழுதி வருக.

Ø  நிறுத்தற் குறியீடுகளைப் பயன்படுத்தி பத்தி / தொடர்கள் எழுதி வருக

Ø  நா பிறழ் பயிற்சிக்கான தொடர்கள் கொடுத்து மாணவர்கள் பயிற்சி செய்து வருதல்




About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...