நாள் : 08-11-2021 முதல் 13-11-2021
மாதம் : நவம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.
தமிழ்விடு தூது
2. தொடர் இலக்கணம்
Ø வேறுபட்ட கவிதை
வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்
Ø தொடர்களின் அமைப்பை
அறிந்து பயன்படுத்துதல்
உட்பொருள் :
Ø தூது – என்பதன்
பொருள் அறிதல்
Ø தமிழ்விடு தூது
பாடல் பொருள் மற்றும் தூது இலக்கியம் பற்றி அறிதல்.
Ø தொடர் அமைப்பை
அறிதல்
Ø எழுவாய்,பயனிலை,செயபடு
பொருள் – பற்றி அறிதல்
Ø வினையின் வகைகள்
அறிதல்
Ø பயன்பாட்டுத் தொடர்கள்
பற்றி அறிதல்
Ø பகுபத உறுப்பிலக்கணம்
அறிதல்
அறிமுகம்
:
Ø தமிழின் சிறப்பை
உணர்த்தும் இனியப் பாடல் பாடி அறிமுகம் செய்தல்
Ø அன்றாட வாழ்வில்
நாம் பயன்படுத்தும் தொடர்களை கரும்பலகையில் எழுத வைத்தல்.
முக்கிய
கருத்துகள் மற்றும்
பாடச்
சுருக்கம் :
Ø தூது – இலக்கியத்தின்
நூற் குறிப்பு
Ø பாடலில் உள்ள நயங்கள்
அறிதல் ( எதுகை, மோனை,இயைபு, பொருள் )
Ø முக்குணம் – சத்துவம்,
இராசசம், தாமசம்
Ø மூன்றினம் – துறை,தாழிசை,
விருத்தம்
Ø நவரசம் – வீரம்
முதல் சமநிலை வரை
Ø வண்ணம் நூறு –
குறில் முதல் இடை மெல்லிசை வரை நூறு வண்ணங்கள்
Ø தொடர் இலக்கணம்
– எழுவாய், பயனிலை,செயபடு பொருள்
Ø பயனிலை – வினை,பெயர்,வினா
Ø வினை வகைகள் –
தன்வினை, பிறவினை
§ செய்வினை, செயப்பட்டு
வினை
Ø பயன்பாட்டுத் தொடர்கள்
Ø பகுபத உறுப்பிலக்கணம் – பகுதி, விகுதி,சந்தி,சாரியை,விகாரம்,
இடைநிலை
ஆசிரியர்
செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை
மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø தூது – என்பது
யாது குறித்தும், தற்போது தூது என்பது எவ்வாறு உள்ளது என்பதனையும் ஒப்பீடு செய்தல்
Ø தமிழ்விடு தூது
– நூல் அமைப்பினைக் கூறல்
Ø தமிழ்விடு தூது
– பாடலை இனிய இராகத்தில் பாடுதல்/ இசையுடன் பாடிய பாடலை வலைதளத்திலிருந்து எடுத்து
காண்பித்தல்
Ø பாடலின்
பொருளினை விளக்குதல்
Ø அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு தொடர்
அமைப்பைக் கூறல்
Ø வினையின் வகைகள் கூறல்
Ø பயன்பாட்டுத் தொடர்களின் வகைகளை அன்றாட வாழ்வியல் கூறுகளோடு
தொடர்புப்படுத்தி கற்பித்தல்
Ø பகுபத – உறுப்புகளை விளக்குதல்
கருத்துரு
வரைபடம் : தமிழ் விடு தூது
மாணவர்
செயல்பாடு :
Ø தமிழிவிடு தூது – நூற் குறிப்பு பிழையின்றி வாசித்தல்
Ø தமிழ்விடு தூது – பாடலினை இனிய இராகத்தில் பாடுதல்
Ø தமிழ்விடு தூது – மனப்பாடப்பாடலை மனனம் செய்தல்
Ø தொடர் அமைப்பை அறிதல்
Ø சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்
Ø வினையின் வகைகள் அறிதல்
Ø பகுபதத்தின் உறுப்புகள் பற்றி அறிதல்
வலுவூட்டல் :
Ø பாடலை மீண்டும் இனிய இராகத்தில் பாடுதல், தொடர்ந்து மாணவர்களையும்
பின் தொடர்ந்து பாட வைத்து வலுவூட்டல்
Ø அன்றாய வாழ்வில் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து
வினையின் வகைகள் வலுவூட்டல்.
Ø பகுபதத்தின் உறுப்புகளை கரும்பலகையில் எழுதி ஒரு சொல்லை மாணவர்கள்
பிரித்து எழுத வைத்து வலுவூட்டல்
குறைதீர்
கற்றல் :
Ø மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு
பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.
மெல்ல
கற்போர் செயல்பாடுகள்:
Ø தமிழ் விடு தூது பாடல் வரிகளை இரண்டு இரண்டு அடிகளாக படித்தல்
Ø எளிய சொற்கள் கொண்டு தொடர் உருவாக்குதல்
மதிப்பீடு :
Ø மனிதர்களால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் _________________
Ø தமிழ்விடுதூது எந்த ஆண்டு அச்சிடப்பட்டது?
Ø நவரசம் என்பவை யாவை?
Ø எழுவாய், பயனிலை,செயபடு பொருள் அமையுமாறு தொடர் உருவாக்குக
Ø படித்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
தொடர்பணி:
Ø பாடப்பகுதியில்
உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------------------
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது