நாள் : 20-12-2021 முதல் 24-12-2021
வாரம் : டிசம்பர் - இரண்டாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : புத்தாக்கப்பயிற்சி 13 மற்றும் 14
பக்க எண் : 57 முதல் 63
நோக்கம் :
Ø உரையாடல்களாக எழுதுதல்
Ø பயன்பாட்டு இலக்கணமாக விளங்கும் இணைச்சொற்களை
அறிதல்
கற்றல் விளைவுகள்:
Ø தங்கள் சுற்றுப்புறத்தில் நடக்கும் நிகழ்வுகளை நுட்பமாக உற்று நோக்கி
அவற்றுக்கான எதிர்வினைகளை எழுத்து வடிவில் பதிவு செய்தல்.
Ø மொழியின் இலக்கணக்கூறுகளைப் புரிந்துக் கொண்டு அவற்றைத் தம் எழுத்துகளில்
கவனமாகப் பயன்படுத்துதல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø உரையாடல் என்பது கருத்து பரிமாற்றம் செய்வதைக் குறிக்கும்.
Ø உரையாடலில் தங்கள் கருத்துகளைக் கூறுவதோடு, தங்கள் உணர்வுகளையும் வெளிப்படுத்த
முடியும்.
Ø உரையாடலில் நாம் கவனிக்க வேண்டியவை:
o
கூறவிருக்கும் கருத்துகளைத்
தெளிவாகவும், சுருக்கமாகவும் எடுத்துரைத்தல்
o
எளிய நடையில் அமைத்தல்
o
நிறுத்தக்குறியீடுகளைப் பொருத்தமான
இடங்களில் பயன்படுத்துதல்
Ø மொழியினைப் பிழையின்றி பேசவும், எழுதவும் உதவுவது இலக்கணம்.
Ø இணைச்சொற்கள் என்பவை தமிழ் மொழியில் இணை இணையாய் அமையும் சில சொற்களைக்
குறிக்கும்.
Ø இணைச்சொற்களால் மொழிநடை சிறப்பாக அமையும், சொல்லப்படும் கருத்தும் திருத்தமாய்
விளங்கும்.
Ø இணைச்சொற்களின் வகைகள்
o
நேரிணைச் சொற்கள்
o
எதிரிணைச் சொற்கள்
o
செறியிணைச் சொற்கள்
Ø நேரிணைச் சொற்கள் :
o
ஒரே பொருள் தரும் இரு இணைந்து
வருவது.
o
உற்றார் உறவினர் அனைவரும்
வாழ்த்தினர் – இதில் உற்றார் உறவினர் என்பது ஒரேப்ப் ஒருப் பொருளைத் தரும் நேரிணைச்
சொற்கள்
Ø எதிரிணைச் சொற்கள் :
o
ஒன்றிற்கொன்று முரண்பட்ட ஒரு
சொற்கள் இணைந்து தொடரில் பொருளை உணர்த்துவது
o
வாழ்க்கை என்பது இன்பத் துன்பங்கள்
கடந்தவை தான் – இதில் இன்பத் துன்பம் என்பது எதிரிணைச் சொற்கள்.
Ø செறியிணைச் சொற்கள் :
o
ஒரு சொல்லின் பண்பு அல்லது
செயலை வலுவூட்டும் விதமாக ஒத்த பொருளுடைய இரு சொற்கள் தொடரில் இணைந்து வருவது.
o
வயல்வெளி பச்சைபசேல் எனக்
காட்சி அளிக்கிறது – இத்தொடரில் பச்சைபசேல் என்பது நிறப்பண்பினை வலுவூட்டும் செறியிணைச்
சொற்கள்
வலுவூட்டல்:
Ø கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும்
நினைவூட்டி பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில்
மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
மதிப்பீடு:
Ø பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள்
விடை காணமுற்படுதல்
தொடர்பணி:
Ø அன்றாட வாழ்வில் நிகழும் நிகழ்வை உரையாடல் வடிவில்
எழுதிவருமாறுக் கூறல்.
Ø நேரிணைச்சொற்கள், எதிரிணைச்சொற்கள், செறியிணைச்
சொற்கள் கொண்டு ஐந்து தொடர்கள் எழுதி வருக.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது