நாள் : 20 -12-2021 முதல் 24 -12-2021
வாரம் : டிசம்பர் - மூன்றாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : புத்தாக்கப்பயிற்சி 13 மற்றும் 14
பக்க எண் : 59 - 63
நோக்கம் :
Ø பத்தியைப் படித்து வினாக்களுக்கு வினா உருவாக்குதல்
மற்றும் விடையளித்தல்.
Ø சூழலைக் கேட்டுப் புரிந்துக் கொண்டு வினாக்களுக்கு
விடையளித்தல்
கற்றல் விளைவுகள்:
Ø தாங்கள் படித்த / கேட்ட ( சமூகம், நகைச்சுவை/ வீரசாகசம் ) கருத்துகள்
பற்றி விவாதிக்கவும் வினாக்கள் எழுப்பவும் விளக்கம் அளிக்கவும் இயலுதல்
Ø தங்கள் சுற்றுசூழலில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு உடனடியாக எதிர்வினை
புரிதலையும் வினாக்கள் எழுப்புதலையும் ஊக்கப்படுத்துதல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø பயிற்சிப்புத்தகத்தில் உள்ள பகுதியினை கவனமாக படித்தல்
Ø ஏற்ற நிறுத்தற் குறி அறிந்து படித்தல்
Ø கொடுக்கப்பட்ட பகுதியினைப் படித்து பொருள் உணர்ந்து கொள்ளுதல்.
Ø கொடுக்கப்பட்ட பகுதியினை ஆழ்ந்து படித்து அதன் உட்கருத்தை அறிய முயற்சித்தல்
Ø படித்தப் பகுதியிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலளிக்க முயற்சித்தல்.
Ø நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தல்
Ø நிகழ்வினை கவனமாக கேட்டறிதல்
Ø அந்நிகழ்வு சார்ந்த வினாக்களுக்கு விடையளிக்க முற்படுதல்
வலுவூட்டல்:
Ø கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும்
நினைவூட்டி பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில்
மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
மதிப்பீடு:
Ø பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள்
விடை காணமுற்படுதல்
தொடர்பணி:
Ø பாடப்பகுதியிலிருந்து ஒரு பகுதியினைக் கொடுத்து அதிலிருந்து
வினாக்கள் உருவாக்கி விடையளித்து வருமாறுக் கூறல்.
Ø கொரானாவிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ளும்
வழிமுறைகளை எழுதி வருக
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது