7TH - REFRESH COURSE - NOTES OF LESSON - DECEMBER - WEEK 1

  WWW,THAMIZHVITHAI.COM

நாள்                         :           06-12-2021   முதல்  11-12-2021                                      

வாரம்                     :         டிசம்பர் -  முதல் வாரம்

வகுப்பு                  :            ஏழாம் வகுப்பு 

                                        ( புத்தாக்கப் பயிற்சி)                             

பாடம்                    :           தமிழ்

பாடத்தலைப்பு    :           புத்தாக்கப்பயிற்சி 7முதல் 9

                    பக்க எண் :      38 -44

நோக்கம்  :

Ø  அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி பற்றி அறிதல்

Ø மரபுத் தொடர்களை பொருளறிந்து பயன்படுத்துதல்.

Ø தமிழ் படைப்பாளர்கள் மற்றும் அவர் தம் படைப்புகள் பற்றி அறிதல்.

கற்றல் விளைவுகள்:

Ø மொழியின் இலக்கணக் கூறுகளைப் புரிந்து கொண்டு அவற்றைத் தம் எழுத்துகளில் கவனமாகப் பயன்படுத்துதல்.

Ø மொழியின் நுட்பமான கூறுகளை மனத்தில் கொண்டு தங்களுக்கான சொந்த மொழியை கட்டமைத்தல்.

Ø கேட்ட அல்லது படித்த பல்வேறு வகை இலக்கியங்கள் பற்றிப் பேசவும்,அவற்றின் மீதான விவாதம் நடத்தவும், பகுப்பாய்வு செய்யவும் வாய்ப்பளித்தல்

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

                             

இரட்டைக் கிளவி

அடுக்குத் தொடர்

இரட்டைச் சொல்லாகவே வரும்

ஒரே சொல் மீண்டும் மீண்டும் அடுக்கி வரும்.

தனித்தனியே பிரித்தால் பொருள் தராது.

தனித்தனியாகப் பிரித்தாலும் பொருள் தரும்

இரண்டு முறைக்கு மேல் அடுக்கி வராது

இரண்டு அல்லது அதற்கு மேல் அடுக்கி வரும்.

ஒலிக்குறிப்பாகப் பயன்படுத்தப்படும்

எ.கா: சட சட ,பட பட

அச்சம்,விரைவு,வருத்தம்,மகிழ்ச்சி, கோபம் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும்.

எ.கா: தீதீதீ, போபோ

 

Ø மரபுத் தொடர் என்பது நேரடியாகப் பொருள் உணர்த்தாமல் குறிப்பால் பொருள் உணர்த்துவதாகும்.

Ø மரபுத்தொடரில் ஒரு சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர் பொருளை உணர்த்தாது.

மரபுத் தொடர்

உணர்த்தும் பொருள்

பஞ்சாகப் பறத்தல்

அலைந்து திரிதல்

ஆகாயத்தாமரை

இல்லாத ஒன்று

நீர் மேல் எழுத்து

மறைந்து போதல்

முதலைக் கண்ணீர்

பொய் அழுகை

மலையேறிவிட்டது

மாற்றம் அடைதல்

பசுமரத்தாணி

ஆழமாகப் பதிதல்

கம்பி நீட்டினான்

ஓடி விடுதல்

பச்சைக் கொடி

இசைவு தெரிவித்தல்

Ø புதுவையில் தோன்றி தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் பலர்.

Ø பாரதிதாசன்

Ø வாணிதாசன்

Ø தமிழ் ஒளி

Ø திருமுருகன்

Ø பிரபஞ்சன்

Ø அவர் தம் படைப்புகள குறித்து கலந்துரையாடல்

வலுவூட்டல்:

Ø  கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி  பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

மதிப்பீடு:

Ø பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள் விடை காணமுற்படுதல்

தொடர்பணி:

Ø அடுக்குத்தொடர்,இரட்டைக் கிளவி அமைத்து தொடர் எழுதி வருக.

Ø  உமது பள்ளி நூலகத்தினைக் கொண்டு மரபுத் தொடர்களை எழுதி வருக.

Ø  நீ அறிந்த தமிழறிஞர் ஒருவர் பற்றியும், அவர் தம் படைப்பு குறித்தும் எழுதி வருக.

 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...