6TH - REFRESH COURSE - NOTES OF LESSON - DECEMBER - 1ST WEEK

   WWW.THAMIZHVITHAI.COM

                   

நாள்                         :          06 -12 -2021   முதல்  11-12-2021                   

வாரம்                     :         டிசம்பர் -  முதல் வாரம்

வகுப்பு                  :            ஆறாம் வகுப்பு 

                                        ( புத்தாக்கப் பயிற்சி)                             

பாடம்                    :           தமிழ்

பாடத்தலைப்பு    :           புத்தாக்கப்பயிற்சி 7 முதல் 9

பக்க எண் :                36 முதல் 44

நோக்கம்  :

Ø  இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் அறிதல்

Ø நிறுத்தக் குறிகள் அறிதல்

Ø மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலித்தல்

கற்றல் விளைவுகள்:

Ø மொழியின் இலக்கணக் கூறுகளைப் புரிந்து கொண்டு அவற்றைத் தம் எழுத்துகளில் கவனமாகப் பயன்படுத்துதல்.

Ø பல்வேறு நோக்கங்களுடன் பல்வேறு தலைப்புகளில் சரியான நிறுத்தக் குறியீடுகளுடன் எழுதுதல்.

Ø பலவரிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்பு முறை, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

                   

இரட்டைக் கிளவி

அடுக்குத் தொடர்

இரட்டைச் சொல்லாகவே வரும்

ஒரே சொல் மீண்டும் மீண்டும் அடுக்கி வரும்.

தனித்தனியே பிரித்தால் பொருள் தராது.

தனித்தனியாகப் பிரித்தாலும் பொருள் தரும்

இரண்டு முறைக்கு மேல் அடுக்கி வராது

இரண்டு அல்லது அதற்கு மேல் அடுக்கி வரும்.

ஒலிக்குறிப்பாகப் பயன்படுத்தப்படும்

எ.கா: சட சட ,பட பட

அச்சம்,விரைவு,வருத்தம்,மகிழ்ச்சி, கோபம் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும்.

எ.கா: தீதீதீ, போபோ

Ø காற்புள்ளி அமையும் இடங்களை அறிதல்

o   தொடரில் பல பொருள்கள் அடுக்கி வரும் போது குறிக்கப்படுவது.

Ø அரைப்புள்ளி அமையும் இடங்களை அறிதல்

o   ஓர் எழுவாய் பயனிலைகளைப் பெற்று வரும் போது ஒவ்வொரு பயனிலையின் இறுதியிலும் குறிக்கப்படுவது.

Ø முற்றுப் புள்ளி அமையும் இடங்களை அறிதல்

o   ஒரு தொடர் முடிவு பெற்றதனை உணர்த்துவதற்காகக் குறிக்கப்படுவது.

Ø வினாக்குறி அமையும் இடங்களை அறிதல்

o   ஒரு தொடர் வினாப் பொருளைத் தரும் போது குறிக்கப்படுவது.

Ø உணர்ச்சிக்குறி அமையும் இடங்களை அறிதல்

o   ஒரு தொடர் உணர்ச்சியை வெளிப்படுத்தும் போது குறிக்கப்படுவது.

Ø ஒற்றை மேற்கோள் அமையும் இடங்களை அறிதல்

o   ஒரு தொடரில் நூல் பெயர், கட்டுரை பெயர், பழமொழி முதலியன வந்தால் குறிக்கப்படுவது.

Ø இரட்டை மேற்கோள் அமையும் இடங்களை அறிதல்

o   நேர்க்கூற்றாக கூறும் போது குறிக்கப்படுவது.

Ø ஒலிப்பின் நுண்ணிய வேறுபாடுகள் அறிதல்

Ø ல – முதல் லகரம்        ழ – சிறப்பு ழகரம்       ள – பொது ளகரம்

Ø ர – இடையின ரகரம்  ற – வல்லின றகரம்

Ø ண – டண்ணகரம்      ந – தந்நகரம்            ன - றன்னகரம்

வலுவூட்டல்:

Ø  கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி  பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

மதிப்பீடு:

Ø பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள் விடை காணமுற்படுதல்

தொடர்பணி:

Ø அடுக்குத்தொடர்,இரட்டைக் கிளவி அமைத்து தொடர் எழுதி வருக.

Ø  ஆசிரியர் வழங்கும் உரைப்பத்திக்கு ஏற்ற நிறுத்தற் குறியீடுகளை பயன்படுத்தி எழுதி வருக.

Ø மயங்கொலி வேறுபாடு உடைய சொற்கள் எழுதி அதன் பொருள் எழுதி வருக.




About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...