TEACHERS - GENERAL - COUNCELLING 2021

 ஆசிரியர்களுக்கு வணக்கம். அனைவரும் கடந்த இரண்டு வருடங்களாக எதிர்பார்த்த பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்பொழுது நடைபெற உள்ளது. இதில் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய வண்ணம் பணியிட மாறுதல் கிடைக்க வேண்டும் என்று நான் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். கடந்த சில நாட்களாக ஆசிரியர்களை மகிழ்வூட்டக்கூடிய  செய்திகள் நாம் காதை வந்தடைகிறது. மிகவும் நல்ல செய்திகள் தான். 2021 ஆம் ஆண்டு செல்லும் போது ஆசிரியர்களுக்கு நல்ல செய்தியை தந்து விட்டு போகிறது. வரும் 2022 ஆம் ஆண்டு அனைத்து மக்களும் மகிழ்வுறும் ஆண்டாக அமைய வேண்டும்.


கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என்ற மகிழ்வான செய்தியை கேட்டோம். அதற்கு அடுத்தக் கட்டமாக ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் எந்தெந்த நாட்களில் எந்தெந்த மாறுதல்கள் நடைபெறுகிறது என்பதனை அட்டவணை மூலம் அறிந்துக் கொள்ளுங்கள்.
  • 31-12-2021 முதல் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 07-01-2022 வரை நடைபெறும்
  • 10-01-2022 பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல்.
  • 11-01-20211 - மாறுதல் விண்ணப்ப முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின்.
  • 13-01-2022 மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியிதல்.
  • 19-01-2022  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் )
  • 20-01-2022 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் )
  • 21-01-2022 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்
  • 21-01-2022 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
  • 22-01-2022 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு
  • 24-01-2022 முற்பகல் - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் ( ஒன்றியத்திற்குள் ) ( தொடக்கக் கல்வி )
  • 24-01-2022 பிற்பகல் - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் ( கல்வி மாவட்டத்திற்குள் ) ( தொடக்கக் கல்வி )
  • 25-01-2022 பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் ( வருவாய் மாவட்டத்திற்குள் )
  • 27-01-2022 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( வருவாய் மாவட்டத்திற்குள் )
  • 28-01-2022 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம் )
  • 29-01-2022 பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் ( தொடக்கக்கல்வி )
  • 31-01-2022 - முற்பகல் -பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு - ஒன்றியத்திற்குள் ( தொடக்கக்கல்வி )
  • 31-01-2022 - பிற்பகல் -பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் - வருவாய் மாவட்டத்திற்குள் ( தொடக்கக்கல்வி )
  • 02-02-2022 - உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு
  • 03-02-2022 - முற்பகல் - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்
  • 03-02-2022 - பிற்பகல் - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
  • 04-02-2022 முதுகலை ஆசிரியர்கள் ப ணிநிரவல்
  • மேற்கொண்டு அறிய கீழ் உள்ள PDF கோப்பை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.

ஆசிரியர்கள் பொது மாறுதல்
கலந்தாய்வு  அட்டவணையை
பெற கீழே DOWNLOAD என்பதனைச் சொடுக்கவும்

ஆஆஆ



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...