10TH - UNIT 1 TO 3 - MOZHI PAIRIICHI

 


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்கள் எதிர் வரும் திருப்புதல் தேர்வில் தமிழ் பாடத்தில் மொழித் திறன் பயிற்சிகளையும் நாம் நன்கு செய்து இருக்க வேண்டும். ஏனெனில் குறைக்கப்பட்ட பாடத்தின் அடிப்படையில் வினாக்கள் பெரும்பாலும் மொழித்திறன் பயிற்சியினை சார்ந்து கேட்கப்படலாம். மாணவர்கள் இந்த மொழித்திறன் பயிற்சியில் போதிய அளவில் பயிற்சிப் பெற்றிருக்க வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு இங்கு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல் மூன்று இயல்களுக்கான மொழித்திறன் பயிற்சி வினா - விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இவற்றை தங்களது பாடக்குறிப்பேட்டில் எழுதி வைத்து படிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பத்தாம் வகுப்பு - தமிழ்

குறைக்கப்பட்ட பாடப்பகுதி

பத்தாம் வகுப்பு

மொழிப்பயிற்சி – இயல் 1-3


                                                                     இயல் 1

மொழிபெயர்ப்பு :

1.        If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mandela.

நீங்கள் ஒருவரோடு ஏதோ ஒருமொழியில் பேசினால் அதை அவர் புரிந்துகொள்கிறார். அது அவரது தலைக்குள் செல்கிறது. நீங்கள் அவருடய தாய்மொழியில் பேசினாலோ அது அவருடைய  இதயத்திற்குள் செல்கிறது – நெல்சன் மண்டேலா.

2.       Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going. – Rita mae Brown.

மொழி என்பது ஒரு நாகரிகத்தின் வழித்தட வரைபடம். அது, அம்மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதையும் எங்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நமக்குச் சொல்கிறது – ரீட்டா மே பிரௌன்.

சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.

“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை                                                   

                    தேரும் சிலப்பதி காறமதை                                       

ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்                                                                       

ஓதி யுனர்ந்தின் புருவோமே”

 

“தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை                                                  

                    தேறும் சிலப்பதி காமதை                                        

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்                                                                       

ஓதி யுர்ந்தின் புறுவோமே”

கீழ்க்காணும்  சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

( குவியல், குலை, மந்தை, கட்டு )

சொல்

கூட்டப்பெயர்

சொல்

கூட்டப்பெயர்

கல்

குவியல்

புல்

கட்டு

பழம்

குலை

ஆடு

மந்தை

 

வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

1.        கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2.       ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3.       நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4.       பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

பொது அறிவு நூல்களியத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

 

 

தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.

1.        உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

வையத்தில் வாழும் மாந்தரில் சிலர் பழம் இருக்கக் காய்  உண்பதைப் போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி, துன்பப்படுகின்றனர்.

2.          வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த கவிஞனுக்குத் தனது தலையைத் தந்து மங்காப் பெருமை பெற்றான்.

3.       நளனும் அவனது துணைவியும் நிடத நாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

நளனும் அவன் மனைவியும் நிடத நாட்டுக்கு வந்ததைக் கண்டு அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போல மகிழ்ச்சி கொண்டனர்.

4.          சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

தோட்டத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேன் உண்டன.

5.          பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

ஆவைப்போல் சாந்தமும் வேங்கைபோல் வீரமும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ

விடை : பூந்தேன், பொன்விலங்கு, விண்மழை, மணிமேகலை, பொன்செய், வான்மழை

குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே  விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க.

குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்

    ·        குறளின்பத்தில் திளைக்காதவர் உண்டோ?

·        நான் சுவைக்காத இளநீர் உண்டோ?

·        சிலம்பின் காப்பியச் சுவையை அறியாதவர் உளரோ?

·        மனிதகுல மேன்மையைக் கருதாமல் இருக்கலாமா?

·        விடுமுறை நாளில் மகிழாதவர் உண்டோ?

எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

நான்கு

எறும்புந்தன் கையால் எண்சாண்

எண்

ஐந்துசால்பு ஊன்றிய தூண்

ஐந்து

ரு

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

நான்கு, இரண்டு

௪, 


விடையளிக்க.

இன்சொல் வழி

தீயசொல் வழி

பிறர் மனம் மகிழும்

பிறர் மனம் வாடும்

அறம் வளரும்

அறம் தேயும்

புகழ் பெருகும்

இகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் சேருவர்

நல்ல நண்பர்கள் விலகுவர்

அன்பு நிறையும்

பகைமை நிறையும்.

 

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது ?

·        நான் இன்சொல் வழியில்தான் செல்வேன்.

·        என் நண்பனுக்கும் இன்சொல் வழியைத் தான் காட்டுவேன்.

கலைச்சொல் அறிவோம்.

·        Vowel                        -  உயிரெழுத்து

·        Consonant             -  மெய்யெழுத்து

·        Homogaraph        -  ஒப்பெழுத்து

·        Monolingual         -  ஒரு மொழி

·        Conversation       -   உரையாடல்

·        Discussion              -  கலந்துரையாடல்

பத்தாம் வகுப்பு – தமிழ்

மொழிப்பயிற்சி

இயல் – 2

தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக.

               The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flower’s fragrance fills the  breeze. The breeze gently blows everywhere and makes everything peasant.

                                              பொன்மயமான கதிரவன் அதிகாலையில் எழுந்து, தன் ஒளிக்கதிர்களைப் பரப்பி  இருளை அகற்றியது. பால்போன்ற மேகங்கள் நகரத் தொடங்கின. வண்ணமயமான பறவைகள் தங்கள் அதிகாலை மெல்லிசையை இசைத்தன. அழகான வண்ணத்துப்பூச்சிகள் பூக்களைச் சுற்றி நடனமாடுகின்றன. மலரின் நறுமணம் தென்றலை நிரப்பியது. தென்றல் எல்லா இடங்களிலும் மெதுவாக வீசி எல்லா --வற்றையும் இனிமையாக்கியது

சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்

·        இன்சொல் – பண்புத்தொகை – இனிமையான சொல் கூறுதல்

·                                                                                   நன்று

·        எழுகதிர்       --  வினைத்தொகை  --  கிழக்கில்  எழும்கதிர்  பார்

·        கீரிபாம்பு        -- உம்மைத்தொகை  --  கீரியும் பாம்பும் சண்டையிட்டன.

·        பூங்குழல் வந்தாள் -- அன்மொழித்தொகை --பூப்போன்ற குழல்                      

                           உடைய  பெண் வந்தாள்.

·        மலைவாழ்வார்   -- ஏழாம் வேற்றுமைத்தொகை –

முனிவர் மலைக்கண் வாழ்வார்.

·        முத்துப்பல்   -- உவமைத்தொகை  --  எழிலுக்கு முத்துப் போன்ற பல்.

 

1.        மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.

மலரும் அதற்குப் பெயரும் உண்டு.

2.      அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…… என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக

மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும்.

3.      நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.

மல்லிகை – நறுமணப் பொருள் தயாரிக்க உதவுகிறது.

செம்பருத்தி  -  முடி வலர்ச்சிக்கு உதவுகிறது

4.      அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக்.

அரிய – குறிப்புப் பெயரெச்சம்.

 5.      தொடரில் பொருந்தாப் பொருள்தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மத்தை ஏற்றும்.

பாரதியின் வசனநடை – சிட்டுக்குருவி

மயில்

உறுதிமிக்க மூக்கு; விதையொத்த கண்கள்; சின்னத்தலை; கரும்பச்சை மற்றும் கருநீல நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு; சாம்பல் மற்றும் செந்நிறம் கலந்த முதுகு; நீண்ட அழகிய பல வண்ணத்தாலான தோகை; பனங் கிழங்கையொத்த கால்கள்; இத்தனியும் சேர்த்து ஒருவர் கையிலே பிடிப்பது மிகவும் அரிது. இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டுத் தோட்டத்திற்கு இரண்டு உயிர்கள் வந்துபோகின்றன. அவற்றில் ஒன்று ஆண் மயில் மற்றொண்று பெண் மயில் .

சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

1.           முதல் இரன்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.  – நறுமணம்

2.         பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்  - புதுமை

3.      இருக்கும்போது உருவமில்லை- இல்லாமல் உயிரினம் இல்லை – காற்று

4.      நாலெழுத்தில் கண்சிமிட்டும் – கடையிரண்டில் நீந்தும் – விண்மீன்

5.         ஓரரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம் – காடு.

நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக

விடைகள் :

1.        காற்றின் பாடல்   ;  2. மொட்டின் வருகை   3. மிதக்கும் வாசம்

4. உயிர்ப்பின் ஏக்கம்   5. நீரின் சிலிர்ப்பு            6. வனத்தின் நடனம்.

கலைச்சொல் அறிவோம் :

1.      Storm     -  புயல்                                             2. Tornado  -  சூறாவளி

3.     Tempest  -  பெருங்காற்று                    4.  Land breeze  -  நிலக்காற்று

5.      Sea breeze  -  கடல் காற்று                   6.   Whirlwind  -  சுழல்காற்று

 

பத்தாம் வகுப்பு

மொழிப்பயிற்சி – இயல் 3

மொழிபெயர்க்க :

                Respected ladies  and gentlemen, I am langovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all.

            பெரியோர்களே தாய்மார்களே வணக்கம். நான் இளங்கோவன், பத்தாம் வகுப்புப் படிக்கிறேன். நமது தமிழ்ப் பண்பாடு  பற்றிப் பேசுவதற்காக நான்  இங்கு வந்துள்ளேன். தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கியதாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோலவே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர் தமிழர். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரது வாழ்க்கையிலும் தமிழர்  பண்பாடு வேரூன்றியுள்ளது. நம்முடைய பண்பாடு மிகத் தொன்மையானதாக இருந்தாலும், தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது.  நம்முடைய பண்பாட்டைப் பற்றி நாம் பெருமை கொள்ள வேண்டும். அனைவருக்கும்  நன்றி!

பழமொழிகளை நிறைவு செய்க.

1.  உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

2. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

3. உப்பிட்டவரை உள்ளளவும் நினை

4. விருந்தும்  மருந்தும் மூன்று நாளைக்கு.

5. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.

 

நெல்லை அவித்துக் காயவைத்து, எடுக்கும் புழுங்கல் அரிசியைச் சோறாக்கி, அதனை இரவெல்லாம் நீரில் ஊறவைத்து, கிடைக்கும் பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வடுமாங்காய், உப்பு நாரத்தாங்காய் மற்றும் சுண்ட வைத்த குழம்பு இவற்றில் ஒன்றைக்  கூட்டாக வைத்துச் சாப்பிடுவது கிராமத்து உன்னதம்.

 

கதையாக்குக .

               மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம். புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருள்களைத் திரட்டி, கற்பனை நயம் கூட்டிக் கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பராக, யாருமற்றவராக.......... இருக்கும்  ஒருவர் உங்களின்  உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.

               பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். வயதான ஒருவர் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். பார்த்தாலே அவர் பல நாள்களாகச் சாப்பிடவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் கீழே விழப் போனார். நான் ஊடிச் சென்று அவரைப் பிடித்துக்கொண்டேன். அவரிய அங்கிருந்த மரத்தடியில் அமர வைத்து, என்னுடைய மதிய உணவை அவருக்குச் சாப்பிடக் கொடுத்தேன். போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது அவருக்கு. காவல்துறைக்குத் தெரிவித்து உதவியற்றோர் காப்பகத்தில் அவரைச் சேர்க்க உதவினேன். கண்ணீரோடு நன்றி சொன்னார்.  நான் மகிழ்ச்சியோடு பள்ளிகுச் சென்றேன்.

              

நயம் பாராட்டுக.

“கத்துகடல் சூழ்நாகைக் காத்தாந்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்.”

 மோனை நயம் :

த்தமிக்கும் – ரிசி  - கப்பை- ன்னம்

எதுகை நயம் :

த்துகடல் – அத்தமிக்கும்  ;  உலையிலிட  -  இலையிலிட

அணி நயம் :

இதில் இயல்பு நவிற்சி அணி வந்துள்ளது

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக்  கண்டுபிடிக்க.

கு (பறவையிடம் இருப்பது )

குருதி (சிவப்பு நிறத்தில் இருக்கும் )

வாள் (மன்னரிடம் இருப்பது )

க்கா (தங்கைக்கு மூத்தவள் )

தி ( அறிவின் மறுபெயர் )

படகு ( நீரில் செல்வது)

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

சிலை – சீலை = சிலையை சீலையால் மூடினான்.

தொடு –தோடு   =  நீ தொடுவது என் தோடு.

மடு -  மாடு                = மடுவில் மாடு மேய்ந்தது.

மலை- மாலை       = மாலையில் மலை ஏறினான்.

வளி – வாளி             = வளி சுழன்றடித்ததால் வாளி பறந்தது.

விடு – வீடு               = வீட்டில் விடுவேன் வா.

 

கலைச்சொல் அறிவோம் :

1. Classical literature                        - செவ்விலக்கியம்

2. Epic literature                               -  காப்பிய இலக்கியம்

3. Devotional literature                   -  பக்தி இலக்கியம்

4. Ancient literature                        -  பண்டைய இலக்கியம்

5. Regional literature                       - வட்டார இலக்கியம்

6. Folk literature                               - நாட்டுப்புற இலக்கியம்

7. Modern literature                        -  நவீன இலக்கியம்



About THAMIZHVITHAI

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...