ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். பிப்ரவரி 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சுழற்சி முறை இல்லாமல் 100% சதவீதம் மாணவர்களின் வருகையுடன் நேரடி வகுப்பு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் புத்தாக்கப்பயிற்சி முடிந்து பாடப்புத்தகத்தினை நோக்கி நாம் செல்ல வேண்டும். அந்த பாடப்பகுதியில் காணும் திறன்களை மாணவர்கள் பெற வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் பாடக்குறிப்பேட்டில் சம்பந்தப்பட்ட பாடத்தினை எழுதும் போது அந்த பாடத்தின் கற்றல் விளைவுகள் மற்றும் மெல்லக் கற்போர் செயல்பாடுகள் எழுதிக் கொள்வது நலம் பயக்கும். சென்ற ஆண்டுகளில் ஆய்வுக்கு சென்ற போது காணப்பட்ட குறைகளாக இது சுட்டிக்காட்டப்பட்டு, அதன் தொடர்ச்சியாக இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் கற்றல் விளைவு சார்ந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் முதல் பகுதியாக தற்போது தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தற்சமயம் பயிற்சி உயர் கணினி ஆய்வகம் மூலம் நடைபெற்று வருகிறது என்பதனை நாம் அறிவோம். பிப்ரவரி மாதம் முதல் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. எனவே அனைத்து ஆசிரியர்களும் பாடக்குறிப்பேட்டில் எழுதும் போது அந்த பாடத்திற்கான கற்றல் விளைவு எழுதி இருக்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கம். இதன் அடிப்படையில் நமது வலைதளம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் பாடத்திற்கு தேவையான பாடக்குறிப்பேட்டினை வழங்கி வருகிறது என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த பாடக்குறிப்பேட்டில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கு கற்றல் விளைவுகள் கொண்டு பாடக்குறிப்பேடு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை புத்தாக்கப்பயிற்சி முடிந்து பாடத்தினை நோக்கி செல்ல வேண்டும், ஆதலால் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் பாடத்திற்கு கற்றல் விளைவுக் கொண்டு பாடக்குறிப்பேடு உங்களுக்கு பகிரப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் ஆசிரியர்களும் பயன்படுத்திக் கொள்ளவும்.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் பாடத்திற்கான கற்றல் விளைவுகளுடன் கூடிய பாடக்குறிப்பேட்டினைப் பெற கீழ்க்காணும் பாடங்களுக்கு கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தி பிப்ரவரி முதல் வாரத்திற்கான பாடக்குறிப்பேட்டினைப் பெறலாம்.
ஆறாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
'
ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது