மெல்ல மலரும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி - தமிழ் - குறைக்கப்பட்ட பாடத்திட்டம்

 

இது மெல்ல கற்கும் மாணவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இயல் -1 க்கான சிறப்பு வழிக்காட்டி வினா-விடைகள் எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. இதன் PDF   வடிவம் விரைவில் இந்த வலைப்பூத் தளத்தில் வெளியிடப்படும்.


குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்புதமிழ்

                           இயல் – 1                         அமுத ஊற்று

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                  

1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது___________________

) இலையும்,சருகும் ) தோகையும் சண்டும்     ) தாளும் ஓலையும் ) சருகும் சண்டும்

2. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்____________

) எந் + தமிழ் + நா ) எந்த + தமிழ் + நா ) எம் + தமிழ் + நா   ) எந்தம் + தமிழ் + நா

3. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுதொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே________________

) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ)கேட்டவர்;பாடிய 

) பாடல்;கேட்டவர்

4. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை________

)குலைவகை ) மணிவகை)கொழுந்துவகை ஈ) இலை வகை

 

 

) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                    

1. வேங்கை -  என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

v                                  வேங்கைமரம்தனிமொழி

v                                                          வேம் + கை = வேகின்ற கைதொடர்மொழி

v                                                          வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும்                                 தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது.

2. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.

v                                                              சீவக சிந்தாமணி    

v                                                              குண்டலகேசி

v                                                              வளையாபதி

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

v    ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.- சரி

v    ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.- தவறு

v    ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.- சரி

காரணம்:

v                                  தாறு என்பது வாழைக்குலை

v                              சீப்பு என்பது வரிசையான பழங்கள்

4. உடுப்பத்தூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண் வற்றாகும் கீழ்இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

v                                      உடுப்பத்தூஉம் உண்பதூஉம்இன்னிசை அளபெடை.

v  செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை

சிறுவினா

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

v                      அன்னை மொழியானவள்

v                      அழகான செந்தமிழானவள்

v                      பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

v                      பாண்டியன் மகள்

v                      திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

v                      பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்கணக்கு,

           ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. – இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத்தொடரில் அமைக்க.

       

     காட்டில் பனைவடலி நடப்பட்டது

      தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

      சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

      புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

      தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

3.அறிந்தது,அறியாதது,புரிந்தது,புரியாதது,தெரிந்தது,தெரியாதது,பிறந்தது,பிறவாததுஇவை அனைத்தையும் யாம் அறிவோம்.அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

        

 அறிதல்

அறியாமை

புரிதல்

புரியாமை

தெரிதல்

தெரியாமை

பிறத்தல்

பிறவாமை

 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...