இது மெல்ல கற்கும் மாணவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இயல் -2 க்கான சிறப்பு வழிக்காட்டி வினா-விடைகள் எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. இதன் PDF வடிவம் விரைவில் இந்த வலைப்பூத் தளத்தில் வெளியிடப்படும்.
இயல் - 2
உயிரின் ஓசை
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. உனக்குப்
பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் – பாரதியின்
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம்,எதுகை ஆ)
மோனை,எதுகை இ) முரண்,இயைபு ஈ) உவமை,எதுகை
2. பெரிய
மீசை சிரித்தார். தடித்தச்
சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை இ)அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
ஆ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-
1. நமக்கு
உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் – இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு
முழக்கத் தொடர்களை எழுதுக.
v மரம் வளர்ப்போம்;காற்றின்
பயன் அறிவோம்
v மரம் நடுவோம்;காற்றை பெறுவோம்
2. வசன கவிதை – குறிப்பு
வரைக.
உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்
கவிதை வடிவம் வசன கவிதை.
3. தண்ணீர்
குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில்
அமைக்க.
v
.தண்ணீரைக் குடி – அவன்
தண்ணீரைக் குடித்தான்
v
தயிரை உடைய குடம் – கமலா
தயிர்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.
இ) சிறுவினா 1. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும்
வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள்
வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில்
உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து
எழுதுக.
மல்லிகைப்பூ |
இருபெயரொட்டு பண்புத்தொகை |
மல்லிகையான பூ |
பூங்கொடி |
உவமைத் தொகை |
பூப் போன்ற கொடி |
ஆடுமாடு |
உம்மைத் தொகை |
ஆடுகளும்மாடுகளும் |
தண்ணீர்த் தொட்டி |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
தண்ணீரை உடையத் தொட்டி |
குடிநீர் |
வினைத்தொகை |
குடித்தநீர்,குடிக்கின்றநீர்,குடிக்கும் நீர் |
சுவர்கடிகாரம் |
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
சுவரின் கண் கடிகாரம் |
மணி பார்த்தாள் |
இரண்டாம் வேற்றுமைத் தொகை |
மணியைப் பார்த்தாள் |
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது