ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த கொராணா காலக் கட்டத்தில் ஆசிரியர்கள் இணைய வகுப்பில் பாடங்களை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு தேவையான செயல்பாடுகளை பல தயார் செய்து வருகின்றனர். அதில் ஒன்று PDF. இந்த PDFஐ மாணவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். இந்த PDFஐ இயங்கக் கூடிய வகையில் இதனை அமைத்தால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் செயல்பாடுகளை செய்வர்.அதனை எவ்வாறு செய்வது என்பதனை விளக்கும் காணொளி.
இந்த காணொளியை காண்பதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான பணித்தாள்கள் செய்யலாம். அதனை மாணவர்களுக்கு பகிரலாம். இந்த காணொளியானது பகுதிப் பகுதியாக வரும். ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் ஒரு காணொளியாக வெளியிடப்படும். தொடந்து இந்த வலைப்பக்கத்தினை பின்தொடர்ந்து வாருங்கள்.இதில் பகிரப்படும் தகவல்கள் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவலாகப் பெறப்படும்.
இந்த PDF இயங்கக் கூடிய பணித்தாளாக மாற்ற LIVE WORK SHEET என்ற இணைய தளம் நமக்கு உதவிகரமாக இருக்கிறது. இந்த வலைத்தளத்தில் ஆசிரியர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு முதலில் கணக்குத் துவங்க வேண்டும். கணக்குத் துவங்க கட்டணம் ஏதும் இல்லை. அதேப் போன்று பணித்தாள் உருவாக்கவும் கட்டணம் இல்லை. அனைத்தும் இலவசம்.
இந்த இணையத்தளத்தின் வாயிலாக நீங்கள் ஒன்றல்ல....இரண்டல்ல.....
ஒரு இலட்சத்து இருபதாயிரம் (1,20,000) பணித்தாள்களை நீங்கள் உருவாக்கலாம். அதனை உங்கள் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கலாம். உங்களை போன்று மற்ற ஆசிரியர்கள் உங்களின் பணித்தாளினை அவர்கள் மாணவர்களுக்கு வழங்கலாம். அவர்களுடைய பணித்தாளினை நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு வழங்கலாம். இதற்கு உருவாக்கியவரின் அனிமதி வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் நீங்களோ உங்கள் மாணவர்களோ பயன்படுத்தும் போது அதனை உருவாக்கியவர் பற்றிய விபரங்களை காணலாம்.
இந்த இணையதளம் வாயிலாக பல்வேறு விதமான செயல்பாடுகளை செய்ய இயலும். சரியான விடையை தேர்வு செய்தல், பொருத்துக, விடையை இழுத்து வைத்தல், சொல்வதனை எழுதுதல், காணொளிக் கண்டு பதில் அளித்தல், சொற்களைத் தேடல் என பல்வேறு வகையான செயல்பாடுகளை செய்ய இயலும். மாணவர்கள் இவற்றை பயிற்சிப் பெறும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும் செய்வர். இதன் மூலம் கற்றல் -கற்பித்தல் நிகழ்வு ஓரளவு நிறைவடையும். (நேரில் ஒப்படைத்தது போன்று எப்படியும் இருக்காது.)
மேலும் தமிழ் பாடங்கள் சம்பந்தமான காணொளியைக் காண தமிழ்விதை வலையொளியைக் காணுங்கள்...மாணவர்களுக்கு பயன்ப்படக் கூடிய பல காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு தேவையான சில தொழில் நுட்ப காணொளிகளும் உள்ளன. என்றென்றும் கல்விப்பணியில் தொடர்ந்து சேவையாற்றிட நீங்கள் எனக்கு பெருமளவு ஆதரவு தருமாறு அன்போடு வேண்டுகிறேன். உங்களின் ஆதர்வு
SUBSCRIBE,
LIKE,
SHARE,
COMMENDS என்ற அடிப்படையில் வழங்கிடவும். இந்த சேனலைக் காண தமிழ்விதை பெயரைத் தொடுங்கள் அது உங்களை அந்த சேனலுக்கு அழைத்துச் செல்லும்.
மாணவர்களுக்கு..........
மாணவர்களே இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளி செல்ல இயலா நிலையில் இருக்கிறோம். வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்குத் தேவையான காணொளிகளையும், பயிற்சித்தாள்களையும் இந்த வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறோம். மாணவர்கள் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். காணொளி பாடங்களை தமிழ்விதை ( YOUTUBE ) வலையொலியில் நீங்கள் கண்டு கற்கலாம்.
இங்கே உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் காணொளியானது
LIVE WORK SHEET TUTORIAL
பகுதி - 1.
இந்த பகுதி -1 இல் நீங்கள் காணவிருப்பது....
1. கணக்குத் துவங்குதல்.
2. இணையத்தளம் அறிமுகம்
3. இணையத்தளத்தில் உள்ள செயல்பாடுகள்
4. உருவாக்கப்பட்ட பணித்தாளுக்கான இணைய சொடுக்கியைப் பெறுவது.
5. உருவாக்கிய பணித்தாளினை சரிப் பார்த்தல்
6. பணித்தாளினை எவ்வாறு சேமிப்பது.
என்ற கருது கோளினைக் கொண்டு இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.
காணொளியைக் காணுங்கள் மாணவர்களுக்கு பயன்படக் கூடிய பல்வேறு விதமான பணித்தாளினை உருவாக்குங்கள்...இது உங்களுக்கும்..... மாணவ சமுதாயத்திற்கும், கல்வி உலகத்திற்கும் பெருந்தொண்டு ஆற்றுங்கள்.
LIVE WORK SHEET - TUTORIAL
PART - 1
VIDEO - CLICK BELOW HERE LINK
👇👇👇👇👇
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது