மாணவர்களே இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளி செல்ல இயலா நிலையில் இருக்கிறோம். வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்குத் தேவையான காணொளிகளையும், பயிற்சித்தாள்களையும் இந்த வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறோம். மாணவர்கள் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். காணொளி பாடங்களை தமிழ்விதை ( YOUTUBE ) வலையொலியில் நீங்கள் கண்டு கற்கலாம்.
மொழியை ஆள்வோம்
இந்த பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட இயங்கும் பணித்தாளானது மூன்று வகையான செயல்பாடுகளை கொண்டு விளங்குகிறது. அதற்கு எவ்வாறு விடையளிக்க வேண்டும் என்பதற்கான சிறு குறிப்பு இது. இந்த குறிப்பினைப் பயன்படுத்தி விடையளிக்கவும்.
குறிப்புகள்;-
1. பகுதி -1
மாறியுள்ள சொற்களை முறைப்படுத்தி சரியான தொடர் அமைக்க வேண்டும். தொடர் வாக்கியம் தட்டச்சு செய்யும் போது நெருக்கமாக எழுதக் கூடாது. சிறிது இடைவெளி விட வேண்டும். அப்பொழுதுதான் வினாவிற்கு விடையாக கணினி ஏற்றுக் கொள்ளும்.
2. பகுதி - 2
கட்டங்களில் மறைந்துள்ள பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும். கட்டத்தின் கீழ் உள்ள குறிப்பினைக் கொண்டு அதற்கான விடையை அந்தக் கட்டத்தில் தெரிவு செய்ய வேண்டும். மேலும் அந்த குறிப்புகள் கொடுக்கபட்டுள்ள வினாவில் உள்ள கோடிட்ட இடங்களில் அவற்றினை தட்டச்சு செய்ய வேண்டும்.
liveworksheets.com
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது