மாணவர்களே இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளி செல்ல இயலா நிலையில் இருக்கிறோம். வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்குத் தேவையான காணொளிகளையும், பயிற்சித்தாள்களையும் இந்த வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறோம். மாணவர்கள் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். காணொளி பாடங்களை தமிழ்விதை ( YOUTUBE ) வலையொலியில் நீங்கள் கண்டு கற்கலாம்.
மொழியை ஆள்வோம்
இந்த பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட இயங்கும் பணித்தாளானது மூன்று வகையான செயல்பாடுகளை கொண்டு விளங்குகிறது. அதற்கு எவ்வாறு விடையளிக்க வேண்டும் என்பதற்கான சிறு குறிப்பு இது. இந்த குறிப்பினைப் பயன்படுத்தி விடையளிக்கவும்.
குறிப்புகள்;-
1. பகுதி -1 கலவைத் தொடர் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை இரு தொடர்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்கியத்திற்கும் முற்றுப்புள்ளி அவசியம். நீங்கள் முற்றுப்புள்ளி வைத்து தொடர்ந்து எழுதலாம்.
2. பகுதி - 2 - ஒரு தொடருக்கு பொருத்தமான சொல்லை கண்டுபிடித்து எழுத வேண்டும். எழுத்துகளின் பொருள் வேற்பாட்டை அறிந்து சரியான சொல்லைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. பகுதி - 3 - ஒரு சொல்லின் வேறுபெயர் காணல்.
கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு எழுத்து தான் எழுத வேண்டும். அது அந்த சொல்லின் சரியான வேறு பெயராக இருக்க வேண்டும்.
வாழ்த்துகள்.
ஆசிரியர்கள் இந்த இணைப்பினை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களுடன் இணைத்து அனுப்புங்கள்.அதனை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். பதிவேடு பராமரிப்புக்கு உதவும்.
liveworksheets.com
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது