மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அரசு உயர்நிலைபள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும்,கோவிட-19 காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் - இடைவெளியை குறைக்கவும், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரைகளின் படி, 18-09-21 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் HI TECH LAB மூலம் தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கற்றல் விளைவுகளின் அடிப்படையில் BASIC QUIZ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் ஒரு READING COMPREHENSION சார்ந்து 5 பலவுள் தெரிவு வினாக்களும், 5 இலக்கணம் மற்றும் மொழி அறிவு சார்ந்த பலவுள் தெரிவு வினாக்களும், கணிதம் ,அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலிருந்து 10 பலவுள் தெரிவு வினாக்களும் BASIC QUIZ - இல் கேட்கப்படும்.
இந்த BASIC QUIZ தேர்வு - https://exams.tnschools.gov.in என்ற URL இணைப்பின் மூலம் நடத்தப்படும்.
இதற்கான மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்
பதிவிறக்கம் செய்ய....
இங்கே சொடுக்கவும்
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது