நாள் : 25 -10-2021 முதல் 30 -10-2021
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : பொருளுணர்ந்து படித்தல், கவிதை எழுதுதல்
பக்க எண் : 55 - 57
நோக்கம் :
Ø
ஒன்றைப் படித்து முழுமையான பொருண்மையை உணர்ந்து அதன்
பயன்பாட்டினைக் கூறல்
Ø
கவிதை என்பதனை அறிதல். எழுதுதல்
கற்றல் விளைவுகள்:
Ø
படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும்
சிறப்பாக்குதல்.
Ø
சொல்லக்கூடிய கருத்தை கவிதை வடிவில் நயமுற உரைத்தல்
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø
சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் படித்துப் பொருள் புரிந்து
கொள்ளுதல்.
Ø
படிக்கும் திறன் வளர்த்தல்
Ø
பொருள் புரிந்து சொற்களை பிரித்து படித்தல்
Ø
கவிதை ஒரு கலை என்பதனை உணர்த்துதல்
Ø
எண்ணங்களை சொற்களால் அழகுப்படுத்திக் காட்டுவது கவிதை
Ø
கவிதையின் வகைகள் அறிதல்
வலுவூட்டல்:
Ø
கரும்பலகையில் சில வாக்கியங்கள் எழுதி அதனை படிக்க வைத்தல்.
Ø
பாடப்பகுதியில் உள்ள உரைப்பத்தியைப் படித்தல்
Ø
சிறு சிறு சொற்கள் அமைத்து கவிதையை எழுத வைத்தல்.
Ø
சில மாதிரி கவிதைகளை வகுப்பறையில் வாசித்தல்
மதிப்பீடு:
1. பொருளுக்கு ஏற்பத் தொடரைப் பிரித்துக்
காட்டி படித்தல்
கலாஅத்தை
வீட்டுக்குச் சென்றாள்
பலகைகள் உடைந்தன.
அந்தமான் எப்போது வரும்?
2. இயற்கை அல்லது தமிழ் பற்றி சிறு கவிதை
எழுதுக.
தொடர்பணி:
Ø
பாடப்பகுதியில் உள்ள உரைப்பத்தியை படித்து வருக.
Ø
தாய் அல்லது இந்தியா என்ற தலைப்பில் சிறு கவிதை எழுதி
வருக.
PDF - FORMAT
குறிப்பு :
தமிழ்விதை தினசரி செய்ய
வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார்
செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு
மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும்
ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க. நன்றி, வணக்கம் – தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது