நாள்
: 22-11-2021
முதல் 27-11-2021
வாரம்
: நவம்பர் - நான்காம் வாரம்
வகுப்பு
: எட்டாம் வகுப்பு
( புத்தாக்கப்
பயிற்சி)
பாடம்
: தமிழ்
பாடத்தலைப்பு : புத்தாக்கப்பயிற்சி 1 முதல் 6
நோக்கம் :
Ø பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல்.
Ø சொற்களை உருவாக்குதல்
Ø எதிர்ச்சொல் அறிதல்
Ø செய்யுளின் நயங்களை அறிதல்
Ø தொடர் அமைத்தல்
Ø
செய்யுளின் மையக்கருத்தையும்,சொற்பொருளையும் எழுதுதல்
கற்றல் விளைவுகள்:
Ø
உரைப்பத்தியைப் படித்து பின்னர் அது சார்ந்து வினாக்களுக்கு விடை காணுதல்.
Ø
சொற்களை உருவாக்குதல், சொற் களஞ்சியம் பெருக்குதல்
Ø
பாடப்பொருளை ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து சில சிறப்புக் கூறுகளைத் தேடிக்
கண்டறிதல்
Ø
செய்யுளில் காணப்படும் தொடை நயங்களை அறிதல்
Ø
சொற்களை பொருத்தமான முறையில் அமைத்து தொடர் அமைக்கும் முறை அறிதல்.
Ø
மொழியின் நுட்பங்களை அறிந்து கதை,கட்டுரைகளின் நயம் பாராட்டல்
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø
பத்தியை நன்கு வாசித்தல்
Ø
பத்தியைப் படித்து பொருள் உணர்தல்
Ø
பத்தியில் உள்ள பெயர்சொல்,வினைச்சொல், பிறமொழிச்சொற்கள், மையக் கருத்து
ஆகியவற்றை புரிந்து கொள்ளுதல்
Ø
கொடுக்கப்பட்ட எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குதல்
Ø
சொல்லுக்குள் உள்ள சொல்லை கண்டுபிடித்தல்.
Ø
தொகைச்சொற்களை விரித்து எழுதுதல்
Ø
ஒரு பொருள் தரும் பல சொற்கள் எழுதுதல்
Ø
ஓரெழுத்து ஒரு மொழியை தொடரில் அமைத்து எழுதுதல்
Ø
ஒரு சொல் தொடர்பான எதிர் ( அ ) எதிரான கருத்துகளை வெளிப்படுத்துதல்
Ø
செய்யுளில் எதுகை,மோனை,இயைபு நயம் அறிதல்.
Ø
சொற்றொடர் அமைக்கு முறையை அறிதல்
Ø
செய்யுளில் மையக் கருத்து மற்றும் சொற்பொருள் உணர்தல்
வலுவூட்டல்:
Ø கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில்
மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி பாடப்பொருளை
வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
மதிப்பீடு:
Ø
பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள் விடை
காணமுற்படுதல்
தொடர்பணி:
Ø விளம்பர பகுதியினை சேகரித்து வினாக்கள் உருவாக்கி வருமாறு கூறல்.
Ø ஓரெழுத்து, ஈரெழுத்து,மூவெழுத்து,நான்கெழுத்து,ஐந்தெழுத்து சொற்கள் எழுதி
வருமாறுக் கூறல்
Ø மாணவர்கள் அறிந்த எதிர் சொற்கள் எழுதி வருமாறுக் கூறல்
Ø பாடப்பகுதியில் உள்ள செய்யுளில் எதுகை,மோனை,இயைபு நயம் அறிந்து
எழுதி வருமாறு கூறல்
Ø தொடர் அமைப்பு முறை அறிந்து 5 தொடர்கள் எழுதி வருக.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது