7TH - REFRESH COURSE - NOTES OF LESSON - NOVEMBER - WEEK 4

 WWW,THAMIZHVITHAI.COM

நாள்                         :           22-11-2021   முதல்  27-11-2021                                      

வாரம்                     :         நவம்பர் -  நான்காம் வாரம்

வகுப்பு                  :            ஏழாம் வகுப்பு 

                                        ( புத்தாக்கப் பயிற்சி)                             

பாடம்                    :           தமிழ்

பாடத்தலைப்பு    :           புத்தாக்கப்பயிற்சி 1 முதல் 3

 நோக்கம்  :

Ø  மூவிடப்பெயர்களை அறிந்து கொள்ளுதல்.

Ø சொற்றொடர் அமைக்கும் முறை அறிதல்

Ø அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்

கற்றல் விளைவுகள்:

Ø மொழியின் இலக்கணக் கூறுகளைப் புரிந்துக் கொண்டு அவற்றை எழுத்துகளின் கவனமாக பயன்படுத்துதல்

Ø சொற்களை உருவாக்குதல், சொற் களஞ்சியம் பெருக்குதல்

Ø சொற்கள் கொண்டு தொடர் அமைக்கும் முறையை அறிதல்.

Ø சொற்களின் பொருளை அகராதிகளில் கண்டறிதல்

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

Ø உரையாடல் என்பது எது என அறிதல்

Ø தன்மை – தன்னை குறிப்பது

Ø முன்னிலை – முன்னால் இருப்பவரைக் குறிப்பது

Ø படர்க்கை – இருவரைத் தவிர மற்றவர்களை/ மற்றவற்றைக் குறிப்பது.

Ø தன்மை பெயர்கள் : நான்,நாம், யான்,யாம்,நாங்கள்

Ø முன்னிலை பெயர்கள் : நீ, நீர், நீவீர், நீங்கள்

Ø சொற்கள் பல தொடர்ந்து வருவது தொடர்.

Ø தொடரில் எழுவாய்,செயபடுபொருள்,பயனிலை பற்றி அறிதல்

Ø எழுவாய் – பெயர்ச்சொல்

Ø பயனிலை – வினைச்சொல்

Ø செயபடு பொருள் – தொடரில் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்

Ø சொற்களின் பொருள் அறிய அகராதியை பயன்படுத்துதல்.

Ø அகராதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனக் கூறல்.

வலுவூட்டல்:

Ø  கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி  பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

மதிப்பீடு:

Ø பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள் விடை காணமுற்படுதல்

தொடர்பணி:

Ø பொருத்துக:

               நான்             -        அவை

               நீ                  -        நாங்கள்

               அது              -        நீங்கள்

Ø  மாறன் ஓவியத்தை வரைந்தான் -தொடரில் எழுவாய்,பயனிலை,செயபடுபொருள் கண்டறிக.

Ø  எழுவாய்,செயபடுபொருள்,பயனிலை வைத்து தொடர் அமைத்து எழுதுக.

Ø இன்னல்,தண்மாரி,அடிசில்,குரவை,உயிர்வளி, தண்மை – இச்சொற்களுக்கு அகராதியைக் கொண்டு பொருள் எழுதி வருக




About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...