7TH - REFRESH COURSE - NOTES OF LESSON - NOVEMBER - WEEK 5

 WWW,THAMIZHVITHAI.COM

நாள்                         :           29-11-2021   முதல்  04-12-2021                                      

வாரம்                     :         நவம்பர் -  இறுதி வாரம்

வகுப்பு                  :            ஏழாம் வகுப்பு 

                                        ( புத்தாக்கப் பயிற்சி)                             

பாடம்                    :           தமிழ்

பாடத்தலைப்பு    :           புத்தாக்கப்பயிற்சி 4 முதல் 6

நோக்கம்  :

Ø  செய்யுளினை பிழையின்றி சரியான ஒலிப்புடன் படித்தல் மற்றும் நயம் பாராட்டல்.

Ø மரபுச் சொற்களை அறிந்து பயன்படுத்துதல்.

Ø தொழிலையும்,பண்பாட்டையும் உணர்த்தும் சொற்கள் அறிதல்.

கற்றல் விளைவுகள்:

Ø செய்யுளில் பா நயங்களான மோனை,எதுகை,இயைபு அறிதல்.

Ø மொழியின் இலக்கணக்கூறுகளை அறிந்துக் கொண்டு அவற்றை தம் தொடர்களில் கவனமாக பயன்படுத்துதல்.

Ø பல்வேறு தலைப்[புகளின் கீழ் பயன்படுத்தப்பட்ட சொற்களையும், தொழில்கள் மற்றும் பண்பாடு சார்ந்த சொற்களையும் அறிந்து பயன்படுத்துதல்.

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

Ø மோனை – முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது

Ø எதுகை  – இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது.

Ø இயைபு  – இறுதி எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது.

Ø முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் வழங்கினார்களோ அப்பொருளை அச்சொல்லால் வழங்குவது மரபு.

Ø இளமை பெயர்கள், ஒலி மரபுகள்,இருப்பிட மரபுச் சொற்கள், வினை மரபுச் சொற்கள்.

Ø நிலத்திற்கேற்ற மக்களுக்கு வழங்கும் பெயர்கள்.

Ø நிலத்திற்கேற்ற தொழில் நடைபெறும் இடங்களில் வழங்கப்படும் சொற்களும், பாடல்களும் அறிதல்.

வலுவூட்டல்:

Ø  கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி  பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

மதிப்பீடு:

Ø பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள் விடை காணமுற்படுதல்

தொடர்பணி:

Ø உமது பாடப்புத்தகத்தில் வரும் செய்யுள் பகுதியினை தேர்ந்தெடுத்து அதில் காணும் மோனை,எதுகை,இயைபு நயங்களை எழுதி வருமாறுக் கூறல்.

Ø  உன் வீட்டின் அருகில் உள்ள விலங்குகளின் ஒலி மரபுச்சொற்களை எழுதி வருக.

                            Ø  நாற்று நடவும் போது பாடும் பாடல்களைக் கேட்டு அறிந்து எழுதி வருக. 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...