பத்தாம் வகுப்பு - தமிழ்
மெல்ல கற்கும் மாணவர்களுக்கென உருவாக்கப்பட்ட இந்த கையேடு உங்களுக்கு PDF வடிவில் வழங்குவதில் தமிழ் விதை தளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இந்த தளத்தினை பார்வையிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிகுந்த நன்றி.
உங்களின் பொன்னான ஆதரவினை மேலும் வழங்கி இந்த தமிழ்விதை வலைதளத்தினை ஆலமரமாய் மாற்ற உங்களால் இயலும். எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய பதிவுகள் மட்டும் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பதனை மீண்டும் நினைவூட்டுகிறேன். இந்த மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கையேட்டு சில ஆசிரியர்களின் பங்கும் இதில் உண்டு. அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த வழிகாட்டி கையேடு - PDF இரகசிய குறியீடு ( PASSWORD ) கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சற்று சிரமம் பாராமல் அந்த இரகசிய குறியீடு பயன்படுத்தி கையேட்டினை படிக்கும் படி அன்போடு வேண்டுகிறேன்.
இந்த கையேட்டின் சில சிறப்புகள்
1. அனைத்து பகுதிகளும் உள்ளது. எந்த ஒரு பகுதியும் ஒதுக்கப்படவில்லை
2. புத்தக வினாக்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது.
3. கட்டுரைகள் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.
4. மனப்பாடப்பாடல்கள் இனிய இராகத்தில் கேட்டு மகிழ தமிழ்விதை வலையொளியில் உருவாக்கப்பட்டுள்ள காணொளி இணைப்புகள் ஒவ்வொரு பாடலிலும் விரைவுத் துலங்கள் குறியீடாக வைக்கப்பட்டுள்ளது.
5. இந்த கையேடு முழுக்க முழுக்க மெல்ல கற்கும் மாணவர்களுக்கானது.
6. பாடங்களை படமாக காண வலையொளி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது ( 51 காணொளிகளுக்கான PLAYLIST )
7. இந்த கையேடு அமேசான் வலைதளத்திலும் கிடைக்கிறது.
8. மெல்ல கற்கும் மாணவர்கள் இதனை படித்தால் நிச்சயம் 50 முதல் 70 மதிப்பெண்கள் வரை பெற இயலும்
பயன்படுத்துங்கள், வெற்றி பெறுங்கள்
முயற்சி
பயிற்சி
வெற்றி
கையேட்டினை பதிவிறக்கம் செய்ய
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது