ஆசிரியர்கள் மற்றும் போட்டித் தேர்வினை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டு இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய உலகில் அரசு வேலை எனபது கடின முயற்சியினால் பயிற்சி எடுத்தால் நிச்சயம் கிடைக்கும் எனபது உண்மை. அதிலும் சலுகைகள் மூலம் கிடைக்கும் போது அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 20% முன்னுரிமை வழங்குகிறது. இதனால் தமிழ் வழியில் படித்தவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள இயலும். நீங்கள் அதற்கான சான்றிதழை தயார் செய்துக் கொண்டு தத்தம் பள்ளிகள்/ கல்லுரிகளுக்கு சென்று தலைமை ஆசிரியர்கள்/ கல்லுரி முதல்வர்களிடம் பெற்று அதனை சமர்பிக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் எவ்வாறு பெறுவது? அல்லது எவ்வாறு தயார் செய்வது ? என்ற குழப்பம் வேண்டாம். உங்களின் குழப்பத்தை இந்த வலைதளமானது தீர்த்து வைக்கும். தமிழ் நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கிடைக்கப்பெற்ற தமிழ் வழி சான்றிதழ் இந்த வலைதளத்தில் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள DOWNLOAD என்பதனை அழுத்திப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த வலைதளம் சில இணைய வழித் தேர்வுகளும் அவ்வப்போது வைக்கப்படுகிறது. உங்களின் முயற்சியினை பரிசோதித்து பார்த்துக் கொள்ள இது ஒரு நல் வாய்ப்பு. மேலும் தமிழ்மொழித் தாளில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே உங்களின் தாள் மதிப்பீடுக்கு ஏற்றுக் கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளமையால் இதில் காணும் இணைய வழி தேர்வினை நன்முறையில் பயிற்சி எடுத்துக் கொள்ளவும். பத்தாம் வகுப்பு பாடத் தரத்திற்கான இணைய வழித் தேர்வினை நீங்கள் www.tamilvithai.com என்ற வலைதளம் மூலம் தேர்வு எழுதலாம்.
PSTM CERTIFICATE
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது