நாள் : 13-12-2021 முதல் 18-12-2021
வாரம் : டிசம்பர் - இரண்டாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : புத்தாக்கப்பயிற்சி 10 முதல் 12
பக்க எண் : 48 -55
நோக்கம் :
Ø கதையினைக் கேட்டு விளக்கம் அளித்தல்/ பேசுதல் திறன் வளர்த்தல்.
Ø பண்பியல் திறன்களை மேம்படுத்துதல்.
Ø நிறுத்தற்க்குறிகளைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.
கற்றல் விளைவுகள்:
Ø தாங்கள் படித்த / கேட்ட ( சமூகம்/நகைச்சுவை/வீரசாகசம் ) கருத்துகள் பற்றி விவாதிக்கவும்,வினாக்கள் எழுப்பவும்,விளக்கம் அளிக்கவும் முயல்தல்.
Ø தங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு உடனடியாக எதிர்வினை புரிதலையும் வினாக்கள் எழுப்புதலையும் ஊக்கப்படுத்துதல்..
Ø பல்வேறு நோக்கங்கள் மற்றும் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதும் போது அதற்கேற்பச் சொற்கள், தொடர்கள், நிறுத்தற் குறிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø செந்தமிழும் நா பழக்கம் என்பதனை அறிந்து பேச பேசத்தான் பேச்சு திருத்தமாக அமையும்.
Ø கதையினை கூர்ந்து கவனித்தல்.
Ø கதையின் மையப்பொருளை அறிந்து அவற்றை தமது சொந்த நடையில் பேச முற்படுதல்.
Ø நற்பண்புகளை மாணவர்களிடையே அறிமுகம் செய்தல்.
Ø இனிமையாகப் பேசுதல், பகிர்ந்து உண்ணுதல் போன்றவை நற்பண்புகள்.
Ø மேலும் சில நற்பண்புகள்:
o பிறருக்கு உதவுதல்
o நன்றி மறவாமை
o உயிர்களிடம் அன்பு காட்டுதல்
o ஒற்றுமையுடன் வாழ்தல்
நிறுத்தற் குறிகள்
பயன்பாடு
முற்றுப்புள்ளி
சொற்றொடர்கள்,பொருளால் முற்றுப்பெற்றது என்பதனைக் குறிக்க.
காற் புள்ளி
ஒரு தொடரில் பெயர்களை, பொருள்களை அடுக்கிக் கூறும் போது
வினாக் குறி
வினாப்பொருளை தரும் சொற்றொடர்களுக்குப் பின்
வியப்புக் குறி
உணர்ச்சி உரைகளுக்குப் பின்
வலுவூட்டல்:
Ø கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
மதிப்பீடு:
Ø பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள் விடை காணமுற்படுதல்
தொடர்பணி:
Ø மாணவர்கள் அறிந்த / படித்தக் கதையினை அறிந்து வகுப்பறையில் பேச வைத்தல்.
Ø நற்பண்புகளை வைத்து கதை ஒன்றை எழுதி வருக.
Ø நிறுத்தற் குறி அறிந்து சில தொடர்களை எழுதி வருக.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது