6TH - REFRESH COURSE - NOTES OF LESSON - DECEMBER - 2ND WEEK

 WWW.THAMIZHVITHAI.COM

நாள்                         :           13-12-2021   முதல்  18-12-2021                                      

வாரம்                     :         டிசம்பர் -  இரண்டாம்  வாரம்

வகுப்பு                  :            ஆறாம் வகுப்பு 

                                        ( புத்தாக்கப் பயிற்சி)                             

பாடம்                    :           தமிழ்

பாடத்தலைப்பு    :           புத்தாக்கப்பயிற்சி 10 முதல் 12

பக்க எண் :                48 முதல் 54

நோக்கம்  :

Ø  மொழி பெயர்த்தல்

Ø வினா உருவாக்குதல்

Ø படித்துப் பொருள் உணர்தல்

கற்றல் விளைவுகள்:

Ø சொற்களின் பொருண்மையை அகராதியில் கண்டறிதல்.

Ø தாங்கள் படித்த, கேட்ட ( சமூகம், நகைச்சுவை,வீரச்செயல்கள் ) கருத்துகள் பற்றிப் பேசவும்,வினாக்கள் எழுப்பவும் தங்கள் நோக்கத்திற்கு ஆதரவான விளக்கம் அளிக்கவும் இயலுதல்.

Ø தாங்கள் கேட்ட அல்லது படித்த பல்வேறு கதைகளைப் பற்றிப் பேசவும்.அவற்றின் மீதான விவாதம் நடத்தவும்,பகுப்பாய்வு செய்யவும் வாய்ப்பு அளித்தல்.

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

Ø பிற மொழிச்சொற்களுக்கான தமிழ் சொற்கள் அறிதல்.

Ø தற்காலத்தில் பழக்கத்தில் பயன்படுத்தப்படும் பிற மொழிச்சொற்களுக்கான தமிழ் சொல் அறிந்து பயன்படுத்துதல்.

o   நேச்சர்           -        இயற்கை

o   மார்னிங்        -        காலை

o   பேக்              -        பை

o   ஸ்கூல்           -        பள்ளி 

Ø வினா என்பது வினவுதல், கேட்டல் எனப் பொருள்படும்.

Ø வினாப் பொருளைத் தரும் வினா எழுத்துகளை அறிதல்.

Ø வினா எழுத்துகளைப் பயன்படுத்தி வினா சொற்களை அமைத்தல்.

Ø பொருளுணர்ந்து படிப்பதால் மட்டுமே கருத்தைப் புரிந்துக் கொள்ள முடியும்.

Ø கேட்பது, பேசுவது இரண்டும் பொருள் புரியும் வகையில் அமைதல் வேண்டும்.

Ø படிப்பதில் பொருள் உணர்தல்

வலுவூட்டல்:

Ø  கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி  பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

மதிப்பீடு:

Ø பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள் விடை காணமுற்படுதல்

தொடர்பணி:

Ø அன்றாட வாழ்வில் நாமும் தினமும் பயன்படுத்தகூடிய பிறமொழிச்சொற்களை அடையாளம் கண்டு அவற்றிற்குரிய தமிழ்ச்சொற்களாக மாற்றி எழுதி வருக.

Ø  நும் பாடப்பகுதியில் ஒரு உரைப்பத்தியினைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்கி எழுதி வருக.

Ø  நீங்கள் உருவாக்கிய உரைப்பத்தி வினாவிற்கு விடை எழுதி வருக.

 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...