நாள் : 13-12-2021 முதல் 18-12-2021
வாரம் : டிசம்பர் - இரண்டாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : புத்தாக்கப்பயிற்சி 13 முதல் 15
பக்க எண் : 58 - 65
நோக்கம் :
Ø மனவரைபடம் உருவாக்குதல்
Ø அறிவிப்பைச் செய்தியாகவும், செய்தியைக் கடிதமாகவும் எழுதிப் பழகுதல்
Ø கட்டுரை எழுதும் அமைப்பினை அறிந்து கட்டுரை எழுதுதல்
கற்றல் விளைவுகள்:
Ø
ஒன்றைப்படித்து முழுமையான பொருண்மையை உணர்ந்து அதன் பயன்பாட்டினைக் கூறுதல்.
Ø
படித்தவற்றைச் சிந்தித்து வினாக்கள் எழுப்பி அவற்றை மேலும் சிறப்பாகப்
புரிந்துக் கொள்ளுதல்.
Ø
பல்வேறு சூழல்களில்/நிகழ்வின் போது மற்றவர்கள் கூறியவற்றைத் தமது சொந்த
மொழியில் எழுதுதல்.
Ø
சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள் போன்றவற்றைப் பயன்படுத்திப்
பல இதழ்களுக்கும்,நோக்கங்களுக்காகவும் எழுதுதல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø
மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவுவது மனவரைபடம்.
Ø
எண்ணங்களை,சிந்தனைகளை ஒருங்கமைக்கும் படைப்பாற்றலே மனவரைபடம்.
Ø
மாணவர்கள் அறிந்த பாடப்பகுதியினை மனவரைபடமாக வரைதல்.
Ø
அறிவிப்பைச் செய்தியாக மாற்றுதல்.
o
அறிவிப்பு எதைப் பற்றியது என்பதனை அறிதல்.
o
சிறு சொற்றொடர் அமைத்தல்
o
வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் தொடர் இருத்தல்
o
அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களும் இடம் பெறுதல்
o
மூவிடங்கள்,காலங்கள் ஆகியவை மாறாமல் இருக்க வேண்டும்.
Ø
அறிவிப்பைக் கடிதமாக மாற்றுதல்:
o
கடிதம் முன்னிலையில் இருத்தல் வேண்டும்.
o
முக்காலங்களையும் கருத்தில் கொண்டு இருத்தல் வேண்டும்.
o
கடித வகையின் தன்மை அறிந்து கடிதப் பகுதிகள் இடம் பெற வேண்டும்.
Ø
கட்டுரையின் அமைப்பு முறை அறிதல்
Ø
முன்னுரை : கட்டுரையின் அறிமுகமாக அமைய வேண்டும்.
Ø
பொருளுரை : எடுத்துக் கொண்ட தலைப்புகளுக்கேற்ப உள் தலைப்புகள் பலவற்றையும்
கொண்டதாக பொருளுரை அமைதல் வேண்டும்.
Ø
முடிவுரை : கட்டுரையில் கூறப்பட்டச் செய்திகளைத் தொகுத்துக் கூறுவதாக
அமைய வேண்டும்.
வலுவூட்டல்:
Ø கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில்
மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி பாடப்பொருளை
வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
மதிப்பீடு:
Ø
பயிற்சிப் புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு விடைக் காணுதல்
தொடர்பணி:
Ø உமது பாடப்பகுதியில் உள்ள ஒரு பாடத்திற்கு மனவரைபடம் வரைந்து வருக.
Ø தங்களுக்கு கிடைத்த அறிவிப்பை செய்தியாக மாற்றி எழுதி வருக.
Ø நீ விரும்பு கவிஞர் குறித்து கட்டுரை எழுதி வருக.
தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது