உலகநாடுகளிலேயே இஸ்ரேல் முதல் நாடாக கொரோனா பிடியிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனோவின் கோரப்பிடியில் மீள முடியாமல் திண்டாடி வருகிறது. எனவே அதனை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியையும் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்துவதற்கான முயற்சியை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல், தடுப்பூசி திட்டத்தின் மூலமாக கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. மேலும் அந்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசமின்றி நிம்மதியாக சுதந்திரமாக இயற்கை சுவாசிக்க துவங்கியுள்ளனர்.
மேலும் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் சுமார் 68% பேருக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவானது தெரியவந்துள்ளது.
இதனால் அந்நாடு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறது. மேலும் உலகிலேயே கொரோனாவின் பிடியிலிருந்து முதல் நாடாக இஸ்ரேல் மீண்டு, சாதனை படைத்திருக்கிறது.
தகவல் : செய்தி சோலை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது