ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு உகந்த முறையில் படித்து நன்மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமாய் தமிழ்விதை வாழ்த்துகிறது. அதற்காக தமிழ்விதை வலைதளத்தில் செய்தி எதுவும் பதிவிடாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது,. இந்த வலைதளம் மூலம் யாரேனும் ஒருவர் பயனடைந்தாலும் எனக்கு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காண்பது, பத்தாம் வகுப்பு இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்களுக்கும் அதற்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை புத்தக வினாக்களாக இல்லாமல் புத்தகத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. மீத்திற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இவை உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதனை கற்று மாணவர்கள் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகள்.
பத்தாம் வகுப்பு ( புதிய பாடத் திட்டம்)
இலக்கண வினா – விடைகள்
இயல் – 3
தொகா நிலைத் தொடர்கள்
1. தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன?
ஒரு தொடர்மொழியில் இரு சொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
எ.கா: குயில் கூவியது.
எழுவாயும்,பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது.
2. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
· தொகா நிலைத் தொடர் ஒன்பது வகைப்படும்.
¯ எழுவாய்த் தொடர்
¯ விளித் தொடர்
¯ வினைமுற்றுத் தொடர்
¯ பெயரெச்சத் தொடர்
¯ வினையெச்சத் தொடர்
¯ வேற்றுமைத் தொடர்
¯ இடைச் சொல் தொடர்
¯ உரிச்சொல் தொடர்
¯ அடுக்குத் தொடர்
3. எழுவாய்த் தொடர் என்றால் என்ன?
எழுவாயுடன் பெயர்,வினை,வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த் தொடர்.
எ.கா: இனியன் கவிஞர் – பெயர்
காவிரி பாய்ந்த்து – வினை
பேருந்து வருமா? – வினா
4. விளித் தொடர் என்றால் என்ன?
விளியுடன் வினை தொடர்வது விளித் தொடர்.
எ.கா: நண்பா எழுது.
நண்பா என்னும் விளிப்பெயர் “ எழுது “ என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளது.
5. வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன?
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத் தொடர் ஆகும்.
எ.கா: ஓடினான் இளவழகன்.
ஓடினான் என்னும் வினை முற்று முதலில் நின்று ஒரு பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.
6. பெயரெச்சத் தொடர் என்றால் என்ன?
முற்றுப் பெறாத வினை பெயர்ச்சொல்லைத் தொடர்வது பெயரெச்சத் தொடர் எனப்படும்.
எ.கா: எழுதிய பாடம்.
7. வினையெச்சத் தொடர் என்றால் என்ன?
முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைத் தொடர்வது வினையெச்சத் தொடர் எனப்படும்.
எ.கா: தேடி ஓடினர்.
8. வேற்றுமைத் தொடர் என்றால் என்ன?
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.
எ.கா: தம்பிக்கு கொடுத்தான் – நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர். ( உருபு – கு)
9. இடைச்சொல் தொடர் என்றால் என்ன?
இடைச்சொல்லுடன் பெயரோ,வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
எ.கா: மற்றொன்று – மற்று + ஒன்று
மற்று என்னும் இடைச்சொல்லை அடுத்து ஒன்று என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
10. உரிச்சொல் தொடர் என்றால் என்ன?
உரிச்சொல்லுடன் பெயரோ,வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
எ.கா: சாலச் சிறந்தது
சால என்பது உரிச்சொல். அதனைத் தொடர்ந்து சிறந்தது என்ற சொல் நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.
11. அடுக்குத் தொடர் என்றால் என்ன?
ஒரு சொல் இரண்டு,மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர்.
எ.கா: வருக ! வருக ! வருக ! ஒரே சொல் உவகையின் காரணமாக அடுக்கி வந்துள்ளது.
12. தொகை நிலைத் தொடர் என்றால் என்ன? அதன் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக:-
வினா எண் ஒன்று முதல் பதினொன்று வரையுள்ள வினாக்களின் விடைகள். தலைப்பிட்டு எழுதுக.
சதீஷ்
ReplyDelete