9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் நேரடி வகுப்புகள் நடை
பெறுகிறது. இதில் 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகளாக புத்தாக்கப்பயிற்சி கட்டகம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் மாணவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நேரடி வகுப்புகளில் கலந்துக் கொள்ளாவில்லை. இதனால் கற்றலில் அந்ததந்த பாடப்பகுதிகளில் அடைய வேண்டிய கற்றல் அடைவுகளை பெற வேண்டி நடந்தப்படுகிறது. இப்போது மாணவர்கள் அந்த பயிற்சிகளில் எந்த அளவு கற்றல் திறன்களை பெற்றுள்ளனர் எனபதனை அறிய 9 முதல் 12 வகுப்புகளுக்கு உயர் கணினி -தொழில் நுட்ப ஆய்வகத்தின் உதவியோடு மாநில அளவிலான மதிப்பீடு முறை தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு 26-10-21 முதல் 29-10-21 வரை நடைபெறவிருக்கிறது. அதனை சார்ந்து இந்த வலைதளத்தில் 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு மாதிரி - மாநில அளவிலான மதிப்பீடு முறைக்கான வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு மாணவர்கள் உடனடியாக விடையை தெரிந்துக் கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். வரையறை கிடையாது. இந்த வினாக்கள் அனைத்தும் பயிற்சிப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள். மொத்தம் 5 பகுதிகள் கொண்டதாக இந்த வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட இணைப்பைத் தொட்டு மாணவர்கள் எந்தப் பகுதி வேண்டுமோ அந்த பகுதிக்கான தேர்வை எழுதலாம். இதனை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நன்றி, வணக்கம்.
ஒன்பதாம் - வகுப்பு
தமிழ்
பகுதி - 1 - மாதிரி மாநில அளவினான மதிப்பீடு 👉👉👉👉👉👉👉 CLICK HERE
Swetha
ReplyDelete